'வேலை முடிந்தால் கைக்கழுவி விடுவார்கள்' தனது முன்னாள் ஐபிஎல் அணியை சாடிய கிறிஸ் கெயில்

ஒரு வீரரை ஒரே அடியாக தூக்கிவிட்டு வேறு ஒருவரை எடுப்பதை அந்த அணி வாடிக்கையாகவே வைத்துள்ளது என கிறிஸ் கெயில் தான் விளையாடிய முன்னாள் அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 23, 2022, 01:43 PM IST
'வேலை முடிந்தால் கைக்கழுவி விடுவார்கள்' தனது முன்னாள் ஐபிஎல் அணியை சாடிய கிறிஸ் கெயில் title=

வரும் 2023 ஐபிஎல் சீசன்தான் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற இருக்கிறது. ஹோம் அண்ட் அவே பாணி மீண்டும் ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க இருக்கிறது. அந்த வகையில், வரும் 15ஆவது ஐபிஎல் தொடரின் மினி ஏலம் கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள போல்காட்டி தீவில் உள்ள கிராண்ட் ஹயாட்  சொகுசு விடுதியில் இன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. 

இந்த ஏலத்தில் மொத்தம் 405 வீரர்கள் பட்டியலிடப்பட்டார்கள். இருந்தாலும், 10 அணிகளுக்கும் தேவையான மொத்த வீரர்களின் எண்ணிக்கை 87 தான்.  எனவே, ஏலத்தில் இந்த 405 வீரர்களில் 87 பேரை தான் அனைத்து அணிகளும் தேர்வு செய்யப்போகின்றன. 

இந்த ஏலத்தை தொலைக்காட்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஒளிபரப்பு செய்கிறது. ஓடிடி தளத்தில் ஸ்போர்ட்ஸ் 18 நிறுவனம் கைப்பற்றியிருந்தது. ஜியோ சினிமா ஆப்பில் ஏலம் ஒளிபரப்பப்படும். இந்நிலையில், ஏலம் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அதிரடி கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் பங்கேற்றிருந்தார். 

மேலும் படிக்க | IPL Auction 2023: நாள், நேரம், இடம், ஒளிப்பரப்பும் சேனல், வீரர்கள் பட்டியல் -முழு விவரம்

அதில் அவர்,"மயங்க் கண்டிப்பாக ஏலத்தில் தேர்வு செய்யப்படுவார். அவர் இல்லை என்றால் நான் மிகவும் ஏமாற்றம் அடைவேன். ஏனென்றால் அவர் அட்டகாசமான வீரர். அவர் பஞ்சாப் அணியில் தனது இடத்தை பிற வீரர்களுக்கு தியாகம் செய்தார். அதன் பிறகும் பஞ்சாப் அணியால் அவர் தக்கவைக்கப்படாததால்ஸ தனக்குள்ளேயே அவர் காயப்பட்டிருக்கலாம். அணிகளால் அவ்வாறு நடத்தப்படுவது ஏமாற்றமளிக்கிறது, ஆனால் அணிகள் இன்னும் அவரை நம்பி அவருக்கு நல்ல பணத்தை வாங்குவார்கள் என்று நம்புகிறேன். அவர் அணியுடன் இணைந்து செயல்படும் அற்புதமான வீரரும் கூட. 

அவர்கள் (பஞ்சாப் அணி) ஒரு நம்பிக்கையான வீரரை சட்டென தூக்கிவிட்டு, வேறு ஒருவருடன் மாற்றிவிடார்கள், இது அபத்தமானது. நீங்கள் துண்டித்துக் கொண்டே இருக்கிறீர்கள், மாறிக்கொண்டே இருக்கிறீர்கள், நீங்கள் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு என 11 வீரர்கள் செட்டாகவே இல்லை. 

சில நேரங்களில் அவர்கள் ஒரே அணியுடன் செல்வார்கள், ஆனால் பெரும்பாலும் வீரர்கள் வசதியாக இருப்பதில்லை (அதிக மாற்றங்களுடன்). அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்போது, ஐபிஎல் தொடர் ஏற்கனவே அழுத்தமாக இருக்கும் போது, (அந்த மாதிரியான அணுகுமுறையுடன்) நீங்கள் அதிக அழுத்தத்தை கொடுத்து முடிப்பீர்கள். அதன் மூலம் அவர்கள் நன்றாக விளையாடுவதை உங்களால் பார்க்க முடியாது" என பஞ்சாப் அணியை தாக்கி பேச்சியுள்ளார். 

ஐபிஎல் மினி ஏலத்தில் கேம்ரூன் கிரீன் அதிக தொகைக்கு ஏலம் போவார் என கூறப்பட்ட நிலையில், அது கெயில் மறுத்துள்ளார். சாம் கரன், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அதிக தொகைக்கு நிச்சயம் ஏலம் எடுக்கப்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த மயாங்க் அகர்வால், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். 

மேக்ஸ்வெல், மில்லர், கெயில் போன்ற அதிரடி வீரர்களை துச்சமென நினைத்து அணியில் இருந்து விடுவித்த ஒரே அணி பஞ்சாப் அணியாகதான் இருக்க முடியும் என ரசிகர்கள் அந்த அணியை தொடர்ந்து கலாய்த்து வருவது வழக்கம். அதற்கேற்ப தற்போது கெயிலும் பஞ்சாப் அணியை தாக்கி பேசியுள்ளார். பஞ்சாப் அணி இம்முறை மினி ஏலத்தில் ரூ. 32.20 கோடியுடன் களமிறங்குகிறது.

மேலும் படிக்க | IPL Mini Auction : சென்னை சூப்பர் கிங்ஸ் மிரட்டப்போகிறதா... மிக்சர் சாப்பிடப்போகிறதா? - முழு பிளான்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News