புதுடெல்லி: WFI தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், போக்சோ வழக்கில் இருந்து வெற்றிகரமாக வெளியேறுகிறார். அவர் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ரத்து செய்யப்பட்டதாக டெல்லி போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
POCSO விவகாரத்தில், விசாரணை முடிந்ததும், 173 Cr PC பிரிவின் கீழ், புகார்தாரரின் அறிக்கையின் அடிப்படையில் வழக்கை ரத்து செய்யக் கோரி போலீஸ் அறிக்கையை சமர்ப்பித்துள்ளோம், அதாவது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை மற்றும் பாதிக்கப்பட்டவர் என்று டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது.
Wrestlers' case | Cancellation report has been filed in the minor's case in Delhi Patiala House Court; the next date of hearing is 4th of July
A Cancellation Report is filed in cases when no corroborative evidence is found
— ANI (@ANI) June 15, 2023
டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மைனர் வழக்கில் ரத்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும்,அடுத்த விசாரணை ஜூலை 4ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிகிறது. உறுதியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத சந்தர்ப்பங்களில், ரத்துசெய்தல் அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | நீர்த்துப் போகும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம்! பிரிஜ் பூஷன் தவறு செய்யவில்லை?!
மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான மற்றொரு வழக்கில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. குற்றப்பத்திரிகையுடன் டெல்லி போலீசார் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தை அடைந்தனர்.
பிரிஜ் பூஷன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்சோ வழக்கின் அறிக்கை பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி காவல்துறை சார்பில் அரசு வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா இந்த அறிக்கையை தாக்கல் செய்தார்.
வினேஷ் போகட், பஜ்ரங் புனியா மற்றும் சாக்ஷி மாலிக் போன்ற பிரபல மல்யுத்த வீர வீராங்கனைகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையுடன் வந்த டெல்லி போலீசார் ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். சுமார் 1 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை என்பதால், குற்றப்பத்திரிகை மூட்டைகளுடன் போலீசார் நீதிமன்றத்திற்கு வந்தனர்.
மேலும் படிக்க | இவர்களுக்கு ஓய்வு தான் கரெக்ட்... சீனியர் வீரர்களை கழட்டிவிட சொல்லும் ஹர்பஜன்!
பிரிஜ் பூஷன் சரண் சிங் எப்படிப்பட்டவர்?
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிறகு , தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு பிரிஜ் பூஷன் சரண் சிங் அளித்த பேட்டியில், மல்யுத்த வீரர்களும் வீராங்கனைகளும் வலிமையானவர்கள். அவர்களைக் கட்டுப்படுத்த என்னை விட வலிமையானவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று கூறியிருந்தார்.
அதேபோல, 2021இல், ஜூனியர் மல்யுத்த போட்டியின் போது, மேடையிலேயே ஒரு மல்யுத்த வீரரை அறைந்தது கேமராவில் சிக்கியபோதும், பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான விமர்சனங்கள் எழுந்தன.
பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதான புகாரை தெரிவித்த மல்யுத்த வீராங்கனைகளும், வீரர்களும் ஜனவரி 2023 இல் உள்ளிருப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் , பஜ்ரங் புனியா மற்றும் பலர் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
மேலும் படிக்க | FIR: பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான எஃப்.ஐ.ஆர் சொல்லும் பாலியல் குற்றச்சாட்டுகள்
இவர்களின் கோரிக்கை மீது அரசு தகுந்த நடவடிக்கை எடுக்காததால், ஏப்ரல் 2023ல் போராட்டம் மீண்டும் தொடங்கியது. பிரிஜ் பூஷண் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். 2012 முதல் 2022 வரை பிரஜ் பூஷன் நடத்திய பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை எழுந்தது.
உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு, 28 ஏப்ரல் 2023 அன்று, டெல்லி காவல்துறை மல்யுத்த சம்மேளத் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்குக் எதிராக இரண்டு எஃப்ஐஆர்களைப் பதிவு செய்தது. மைனர் மீதான குற்றங்களுக்காக POCSO சட்டத்தின் (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம், 2012) கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப்பட்டது . வேறு ஆறு மல்யுத்த வீராங்கனைகளின் புகாரின் பேரில் இரண்டாவது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
பிரிஜ் பூஷன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்
வீராங்கனைகளை தேவையில்லாமல் தொடுவது, பெண்களின் கால்களை தனது கால்களால் நெருடுவது, மைனர் வீராங்கனை ஒருவரின் மார்பகத்தில் கைகளால் வருடியது, மற்றும் அந்தப் பெண்ணை பின்தொடர்வது உள்ளிட்ட பல பாலியல் துன்புறுத்தல்களில் பிரிஜ் பூஷன் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது
மேலும் படிக்க | TNPL: ஒரே பந்தில் 18 ரன்னா... அது எப்படி ? - இதோ வீடியோவை பாருங்க!
போராட்டத்தில் பின்னடைவு
மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு பொய்யானது என மைனர் மல்யுத்த வீராங்கனையின் தந்தை தெரிவித்துள்ளது WFI தலைவருக்கு எதிரான வழக்கை பலவீனப்படுத்துகிறது.
மல்யுத்த சம்மேளனத் தலைவருக்கு எதிரான போராட்டம் இன்று (ஜூன் 15) தவரை ற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாகபோராட்டத்தை முன்னெடுத்தவர்கள் அறிவித்த அடுத்த நாள் (2023, ஜூன் 8), இந்தியாவின் மல்யுத்த அமைப்பின் தலைவருக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குறித்த புகார் வேண்டுமென்றே செய்யப்பட்டது, அதில் உள்நோக்கம் இருப்பதாக மைனர் மல்யுத்த வீராங்கனையின் தந்தை கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தங்கள் மகளுக்கு அநீதி இழைத்ததான தவறான புரிதலின் பேரில், பிரிஷ் பூஷன் சிங்கை பழிவாங்க வேண்டும் என்பதே இந்தப் புகாரின் நோக்கம் என்று மைனர் மல்யுத்த வீராங்கனையின் தந்தை கூறியது பல்வேறு கேள்விகளையும், சநதேகங்களையும் எழுப்புகிறது.
மேலும் படிக்க | விம்பிள்டன் பரிசுத்தொகையை அதிகரிக்கப்பட்டது! $56.52 மில்லியனாக உயர்ந்தது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ