காதல் முதல் கல்யாணம் வரை: இது தோனியின் காதல் கதை!

Dhoni Love Story : இந்தியா - பாகிஸ்தான் தொடருக்காக கொல்கத்தாவில் உள்ள தாஜ் பெங்கால் ஹோட்டலுக்கு சென்ற போது சாக்‌ஷியை சந்தித்தார் தோனி. சிறுவயதில் இருவரின் அப்பாக்களும் நண்பர்கள்.   

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Jul 4, 2022, 01:20 PM IST
  • தோனிக்கு கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது
  • சாக்‌ஷி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்
  • இருவருக்கும் 7 ஆண்டுகள் வயது வித்தியாசம்
காதல் முதல் கல்யாணம் வரை: இது தோனியின் காதல் கதை!  title=

கிரிக்கெட் உலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் தான் மகேந்திர சிங் தோனி. தல, மகி என ரசிகர்கள் இவரை செல்லமாக அழைப்பார்கள். கிரிக்கெட்டில் எப்படி இவரது பயணம் மறக்க முடியாததோ அதேபோல தான் சொந்த வாழ்க்கையிலும் இவரது பயணம். தோனியின் காதல் கதை சற்று வித்தியாசமானது.

dhoni love

கஷ்டப்பட்டு வாழ்க்கையில் ஜெயித்த பின், பெரும் பணக்காரர் ஒருவரின் மகளை திருமணம் செய்யாமல் தனக்கு பிடித்த பெண்ணை கரம் பிடித்தார். ஆனால் சாக்‌ஷியுடனான காதலுக்கு முன்பு தோனிக்கு மற்றொரு காதலும் உண்டு. அதுகுறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | நடிகர் விஜய்- தோனி காம்போவில் அடுத்த படம்? -மிரளும் கோலிவுட்!

சாதாரண குடும்ப பின்னணியில் இருந்து வந்த தோனி 2007-ம் ஆண்டு இந்திய அணிக்கு கேப்டனானார். அவர் தலைமையில் இந்திய அணி 3 ஐசிசி கோப்பைகளை வென்று அசத்தியுள்ளது. அதோடு, 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011-ம் ஆண்டு உலகக்கோப்பையையும் வென்றது. சக்சஸ்புல் கேப்டனான தோனிக்கு காதல் முதலில் சக்சஸ் ஆகவில்லை.

msdhoni

பிரியங்கா என்ற பெண்ணை முதலில் காதலித்தார் தோனி. ஆனால் ஒரு கார் விபத்தில் தோனியின் காதலி உயிரிழக்க, அதன்பிறகு மிகவும் சோகத்தில் இருந்தார். சிறிது காலத்துக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தினார். 

அப்போது இந்தியா - பாகிஸ்தான் தொடருக்காக கொல்கத்தாவில் உள்ள தாஜ் பெங்கால் ஹோட்டலுக்கு சென்ற போது சாக்‌ஷியை சந்தித்தார் தோனி. சிறுவயதில் இருவரின் அப்பாக்களும் நண்பர்கள். ஆனால் இவர்களுக்குள் பெரிய அறிமுகம் இல்லை. ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்திருந்த சாக்‌ஷி மீது தோனிக்கு காதல் ஏற்பட்டது. பின்பு இருவரும் டேட்டிங் செய்துள்ளனர். ஆனால் இவர்களது காதல் குறித்து பெரிதாக மீடியாக்களில் செய்திகள் இடம் பிடிக்கவில்லை. 

ms dhoni

திடீரென ஜூலை 2 2010-ம் ஆண்டு தோனியின் காதலி இவர்தன என ஒரு சிறிய வீடியோவுடன் மிடியாக்களில் செய்திகள் வெளியாகின. அதன் தொடர்ச்சியாக அதே ஆண்டு ஜூலை 4-ம் தேதி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். சிம்பிளாக நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இவர்கள் திருமணம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

dhoni

இவர்கள் திருமணம் செய்து கொண்ட புதிதில், பலரும் இருவருக்குமான வயது வித்தியாசம் குறித்து விமர்சித்தது உண்டு. உண்மையில் இவர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் 7 ஆண்டுகள். தோனி ஜூலை 7, 1981-ம் ஆண்டு பிறந்தவர். சாக்‌ஷியோ நவம்பர் 19, 1988-ம் ஆண்டு பிறந்தவர். 

dhoni

மேலும் படிக்க | புதிய தொழில் தொடங்கிய தோனி! இனி இதில் மட்டும் கவனம் செலுத்த திட்டம்!

திருமணத்துக்கு பிறகு 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் வென்று இந்தியாவின் 28 ஆண்டு கால கனவை நினைவாக்கினார். ஐபிஎல் தொடர் நடக்கும் போதெல்லாம் தோனியில் செல்ல மகள் ஜிவா குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி வைரலாகும்.

dhoni msd

எதற்குமே பெரிதாக ரியாக்ட் ஆகாத தோனி, மகளுடன் இருக்கும் போது மட்டும் மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்துவார். சிம்பிளாக தனக்கு பிடித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News