12 ஆண்டு காத்திருப்பு!! உலகக்கோப்பை களத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்தி

15 வருடமாக காத்திருந்ததுக்கு, இன்று பலன் கிடைத்துள்ளது. இன்று தமிழக வீரர் தினேஷ் கார்த்தி களமிறங்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 2, 2019, 04:22 PM IST
12 ஆண்டு காத்திருப்பு!! உலகக்கோப்பை களத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்தி title=

புதுடெல்லி: வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா அணி விளையாடி வரும் 40 வது உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் இந்திய அணி சார்பாக கேதார் ஜாதவிற்கு பதிலாக தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் விளையாடுகிறார். இதன்மூலம் முதல் முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். இரண்டாவது முறையாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இவர், இந்த முறை தான் களம் கண்டுள்ளார் என்பது சிறப்பு.

இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் 2004 ஆம் ஆண்டு கீப்பராக அறிமுகம் ஆனார். எம்.எஸ். தோனி வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம் பிடித்தார். 

2007 உலகக் கோப்பையில் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால் அவருக்கு களத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை தொடரில் அணியில் இடம் பெறவில்லை. 

12 வருடம் கழித்து மீண்டும் உலகக் கோப்பை தொடரில் விளையாட இந்திய அணியில் இடம் கிடைத்தது. ஆனால் முதல் ஆறு போட்டிகளில் 11 பேர் கொண்ட அணியில் கூட சேர்க்கப்படவில்லை. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 

இந்தநிலையில், இன்று தனது 8வது லீக் போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட இந்திய அணி தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார். இதன்மூலம் 15 வருடமாக காத்திருந்ததுக்கு, இன்று பலன் கிடைத்துள்ளது. இன்று களமிறங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்றைய போட்டியில் 6 அல்லது 7 ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

2019 ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை மூலம் தினேஷ் கார்த்திக் விளையாடுவதற்கான காத்திருப்பு முடிந்தது. பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

Trending News