விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. இந்திய அணி நிர்ணயித்த 399 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணியால் எட்ட முடியவில்லை. சிறப்பாக பந்துவீசிய இந்திய அணி, அந்த அணியை 292 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டியில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இங்கிலாந்து அணி திடீரென இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்திருக்கிறது. அதாவது தொடரின் பாதியிலேயே இந்தியாவில் இருந்து துபாய் செல்ல இருக்கிறது அந்த அணி.
மேலும் படிக்க | IND vs ENG: மைதானத்திற்கே வந்த இந்திய தேர்வு குழு! இந்த வீரர்களுக்கு இனி இடமில்லை!
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு இங்கிலாந்து கிரிக்கெட் அணி எதிர்பாராத இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. அதற்கு பல காரணங்கள் உள்ளன. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15-ம் தேதி தொடங்குகிறது. இதனால் சுமார் 9 நாட்கள் நீண்ட இடைவெளி இருப்பதால், ஓய்வுக்காக இங்கிலாந்து அணி அங்கு செல்கிறது. அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அங்கிருந்து துபாய் சென்றடைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு சில நாட்கள் விடுமுறையில் ஊர் சுற்றி பார்க்கும் இங்கிலாந்து அணியினர் அங்கேயே பயிற்சி எடுக்கவும் இருக்கின்றனர்.
இந்தியாவுக்கு எதிரான தொடர் தொடங்குவதற்கு முன்பே, துபாயில் உள்ள ஐசிசி அகாடமி மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இப்போதும் இதே மைதானத்தில் இங்கிலாந்து பயிற்சி மேற்கொள்ளும் என்று தெரிகிறது. மிக முக்கியமாக, ஸ்பின் டிராக் அமைக்கப்பட்டு பயிற்சி செய்யப்படுகிறது. பிப்ரவரி 13 ஆம் தேதி மூன்றாவது டெஸ்ட் நடைபெறும் ராஜ்கோட்டிற்கு நேரடியாக திரும்பவும் இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. அதேநேரத்தில், இங்கிலாந்து அணி தொடரின் பாதியில் துபாய் செல்வதன் நோக்கம் என்னவென்று புரியவில்லை என்று விளையாட்டுத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். ராஜ்கோட் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றது என்பதால், துபாயில் சுழல் ஆடுகளத்தை இங்கிலாந்து அணி தயார் செய்து பயிற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் இந்திய அணியில் 3வது டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்கள் இருக்கும் என தெரிகிறது. 2 போட்டிகள் மட்டுமே ஓய்வு கேட்டிருந்த விராட் கோலி எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வருவாரா? இல்லை இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சுப்மான் கில் எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு கொடுக்கப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுடன் அஜித் அக்ரகர் பேசியுள்ளார். விரைவில் இங்கிலாந்து அணிக்கு எதிரான எஞ்சிய 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
மேலும் படிக்க | 3ஆவது டெஸ்டில் சுப்மான் கில்லும் கிடையாதா...? இன்றும் விளையாடவில்லை - காரணம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ