டெஸ்ட் போட்டியில் நல்ல ரன்களை அடித்துள்ள குக், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டியை அடுத்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். செப்டம்பர் 7 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவார். அதன் பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டியை விளையாட மாட்டார்.
இந்தியாவுக்கு எதிராக தனது டெஸ்ட் போட்டியை ஆரம்பித்த அலஸ்டைர் குக், இந்தியாவுக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியும் விளையாட உள்ளார். தனது ஓய்வு குறித்து அவரி கூறியதாவது:
இதுதான் சரியான நேரம். கடந்த சில மாதங்களாக அதிக சிந்தனை செய்து வந்தேன். அதன்பிறகு தான் இந்திய கிரிக்கெட்டிற்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரின் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முடிவு செய்தேன். இது ஒரு சோகமான நாள் என்றாலும், நான் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேன், என்னிடம் மிச்சம் ஏதுமில்லை. என் முகத்தில் ஒரு பெரிய புன்னகையுடன் இதை நான் செய்ய முடியும். இதுக்குறித்து நான் எனது சக வீரர்களிடம் கூட பகிர்ந்து கொள்ள வில்லை. எனது முடிவு எனது அணியில் சிலருக்கு கடினமாக இருந்தது. ஆனால் இதுதான் சரியான நேரம் என்று எனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார்.
இவரது ஓய்வு பற்றிய செய்தியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
BREAKING: Alastair Cook has announced he will retire from international cricket following the fifth #ENGvIND Test at The Oval.
Full story ➡️ https://t.co/B1gjrBpzpn#CookRetires pic.twitter.com/kBz0GxkaKh
— ICC (@ICC) September 3, 2018