ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. உலகிலேயே அதிகமானோரால் பார்க்கப்படும் கிரிக்கெட் லீக்கில் இந்த ஆண்டு முதன்முறையாக களமிறங்கிய குஜராத் மற்றும் லக்னோ அணிகள் முத்திரை பதித்துள்ளன. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு கே.எல்.ராகுலும் கேப்டன்களாக இருக்கின்றனர். இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட பிளே ஆஃப் செல்வது உறுதியாகிவிட்டது. இந்த 2 அணிகளின் வெற்றிக்கு 2 முக்கியமான காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிக்கு திரும்பும் கிறிஸ் கெயில் - 2 அணிகளுக்கு ஆட விருப்பம்
சிறந்த கேப்டன்கள்
இரண்டு அணிகளிலும் கேப்டன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஹர்திக் பாண்டியா 10 போட்டிகளில் 333 ரன்கள் எடுத்திருப்பதுடன், பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனான கேஎல் ராகுல், பேட்டிங்கில் உட்சபட்ச ஃபார்மில் விளையாடிக் கொண்டிருக்கிறார். 11 போட்டிகளில் 2 சதங்கள் உட்பட 451 ரன்கள் குவித்துள்ளார். இருவரின் ஆட்டமும் அந்த அணிகளுக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கின்றன.
பந்துவீச்சில் அசத்தல்
குஜராத் மற்றும் லக்னோவில் சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். குஜராத் டைடன்ஸ் அணியில் டி20 கிரிக்கெட் நட்சத்திர பவுலர் ரஷித் கான் மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகியோர் சிறப்பாக பந்துவீசிக்கொண்டிருக்கின்றனர். வேகப்பந்துவீச்சில் லாக்கி பெர்குசன் மற்றும் முகமது ஷமி ஜொலிக்கின்றனர். லக்னோ அணியில் ரவி பிஷ்னோய் சுழற்பந்துவீச்சிலும், வேகபந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர், அவேஷ் கான் ஆகியோர் கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.
அணியுடன் சிறந்த ஃபினிஷர்கள்
கடைசி ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் தான் அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. அந்த அணியில் டேவிட் மில்லர் மற்றும் ராகுல் தியோடியா என சிறந்த ஃபினிஷர்கள் உள்ளனர். தோல்வியின் விளிம்பில் இருக்கும் போட்டியைக் கூட வெற்றிக்கு அழைத்துச் சென்றுவிடுகின்றனர். ராகுல் தெவாடியா ஐபிஎல் 2022 தொடரில் 9 போட்டிகளில் 179 ரன்கள் எடுத்துள்ளார். டேவிட் மில்லர் 9 போட்டிகளில் 275 ரன்கள் எடுத்துள்ளார். லக்னோ அணியில் ஜேசன் ஹோல்டர் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளனர்.
மேலும் படிக்க | பாகிஸ்தான் பந்துவீச்சாளரை வெளுத்து வாங்கிய புஜாரா - சிக்சர் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR