IND vs AUS: மீண்டும் கேஎல் ராகுலுக்கு செக் வைத்த இந்தியா! 4வது டெஸ்டில் அதிரடி மாற்றம்!

IND vs AUS: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் டாப் ஆர்டரில் பெரிய மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Written by - RK Spark | Last Updated : Dec 25, 2024, 01:04 PM IST
  • மீண்டும் ஓப்பனிங் இறங்கும் ரோஹித்.
  • கேஎல் ராகுல் 3வது இடத்தில் இறங்க உள்ளார்.
  • இந்திய அணியில் பெரிய மாற்றம்.
IND vs AUS: மீண்டும் கேஎல் ராகுலுக்கு செக் வைத்த இந்தியா! 4வது டெஸ்டில் அதிரடி மாற்றம்! title=

IND vs AUS: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக இந்த போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய அணிக்கு முக்கியமான ஒரு போட்டியாக மாறி உள்ளது. இந்த தொடரை கைப்பற்றுவதற்கும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதற்கும் இந்திய அணிக்கு கட்டாய வெற்றி தேவைப்படுகிறது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட்டில் இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து குல்தீப் யாதவ் நீக்கம்? அதுவும் இந்த காரணத்திற்காக?

நான்காவது டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் 11 அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ள நிலையில்,  இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் சில மாற்றங்கள் ஏற்பட உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா நான்காவது டெஸ்டில் மீண்டும் ஓப்பனராக களம் இறங்க உள்ளார் என்று கூறப்படுகிறது. ஓப்பனராக விளையாடிக் கொண்டிருந்த கேஎல் ராகுல் மூன்றாவது இடத்தில் களமிறங்கலாம் அல்லது மீண்டும் மிடில் ஆர்டரில் களமிறங்க வாய்ப்புள்ளது.

மூன்றாவது இடத்தில் சுப்மான் கில் இறங்கி கொண்டிருந்த நிலையில் நான்காவது டெஸ்டில் இருந்து அவர் நீக்கப்படவும் வாய்ப்புள்ளது. அதே போல மெல்போன் டெஸ்டில் இரண்டு ஸ்பின்னர்களுடன் இந்திய அணி களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிவடைந்ததால், அனைவரின் கவனமும் இப்போது மெல்போர்னில் நடக்கும் 4வது டெஸ்ட் மீது திரும்பியுள்ளது. 4வது டெஸ்டில் ஆஸ்திரேலியா இரண்டு மாற்றங்களைச் செய்துள்ளது. பிங்க் பால் டெஸ்டில் விளையாடிய ஸ்காட் போலண்ட் அணிக்கு திரும்பி உள்ளார். மேலும் நாதன் மெக்ஸ்வீனிக்கு பதிலாக சாம் கான்ஸ்டாஸ் விளையாட உள்ளார்.

IND vs AUS 4வது டெஸ்டுக்கான இந்தியாவின் சாத்தியமான விளையாடும் XI: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த் (Wk), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, தனுஷ் கோட்யான்.

IND vs AUS 4வது டெஸ்டுக்கான ஆஸ்திரேலியாவின் விளையாடும் XI: உஸ்மான் கவாஜா, சாம் கான்ஸ்டான்ஸ், மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பீட் கர்மிஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட்.

மேலும் படிக்க | Champions Trophy 2025: பறிபோகும் சுப்மான் கில் இடம்! ஒருநாள் அணிக்கு வரும் ஜெய்ஸ்வால்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News