IND vs BAN: இன்றைய டி20 போட்டியில் யார் யாருக்கு வாய்ப்பு? பிளேயிங் 11 இதுதான்!

IND vs BAN: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 தொடர் இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் ஓப்பனிங் செய்ய உள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Oct 6, 2024, 01:03 PM IST
  • தொடக்க வீரராக களமிறங்கும் சஞ்சு சாம்சன்.
  • அபிஷேக் சர்மாவுடன் இணைந்து விளையாட உள்ளார்.
  • கேப்டன் சூர்யகுமார் யாதவ் இதனை உறுதிப்படுத்தினார்.
IND vs BAN: இன்றைய டி20 போட்டியில் யார் யாருக்கு வாய்ப்பு? பிளேயிங் 11 இதுதான்! title=

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று அக்டோபர் 6ஆம் தேதி குவாலியரில் நடைபெறவுள்ளது. மொத்தம் 3 டி20 போட்டிகளில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடுகிறது. வரும் அக்டோபர் 12ஆம் தேதி கடைசி டி20 போட்டி நடைபெறுகிறது. இலங்கை தொடரில் டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் இந்த தொடரிலும் கேப்டனாக தொடர்கிறார். அடுத்தடுத்து டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளதால் சீனியர் வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஓப்பனிங் செய்ய உள்ளனர். இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த சஞ்சு சாம்சனுக்கு இந்த தொடர் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | அஸ்வினின் புதிய சாதனை! உலகளவில் இதுவரை யாருமே செய்தது இல்லை!

வங்கதேசத்திற்கு எதிரான தொடரில் அபிஷேக் சர்மாவை தவிர, வேறு எந்த தொடக்க ஆட்டக்காரர்களும் இடம் பெறவில்லை. ருதுராஜ் கைக்குவாட் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரானி தொடரில் அவர் கேப்டனாக உள்ளதால் டி20 அணியில் இடம் பெறவில்லை. இதன் காரணமாக சஞ்சு சாம்சன் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் தொடக்க வீரராக அபிஷேக் சர்மாவுடன் களமிறங்க உள்ளார். இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக விளையாடவில்லை என்றாலும், ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடக்க வீரராக நிறைய ரன்கள் அடித்துள்ளார். சஞ்சு சாம்சன் தான் தொடக்க ஆட்டக்காராக களமிறங்குவார் என்று கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

குவாலியரில் நடைபெறும் முதல் டி20 போட்டிக்கு முன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "சஞ்சு சாம்சன் இந்த தொடரில் ஓப்பன் செய்வார். அவருக்கு ஜோடியாக அபிஷேக் சர்மா இருப்பார்" என்று தெரிவித்தார். இந்திய அணியில் தொடர்ந்து ஓரம் கட்டப்பட்டாலும், சஞ்சு சாம்சன் மீது பிசிசிஐ நம்பிக்கை வைத்துள்ளது இதன் மூலம் தெளிவாகிறது. மறுபுறம், ஐபிஎல் 2024ல் அபிஷேக் சர்மா தனது திறமையை நிரூபித்தார். ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் இந்தியாவுக்காக சர்வதேச போட்டியில் அறிமுகமானார். முதல் தொடரிலேயே சதம் அடித்து சிறப்பாக விளையாடி இருந்தார். கடைசியாக சஞ்சு சாம்சன் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார். இரண்டு போட்டியில் விளையாடி அவர் இரண்டிலும் 0 ரன்னில் அவுட் ஆனார்.

சிவம் துபே விலகல்

வங்காளதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக சிவம் துபே விலகி உள்ளார். அவருக்கு பதில் திலக் வர்மா அணியில் இடம் பெற்றுள்ளார். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் திலக் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்துள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்த துபே டி20 உலக கோப்பை அணியிலும் சிறப்பாக விளையாடி இருந்தார்.

முதல் டி20 போட்டிக்கான உத்ததேச அணி: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (WK), சூர்யகுமார் யாதவ் (C), நிதிஷ் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியான் பராக், ரின்கு சிங், வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ்

மேலும் படிக்க | ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மீண்டும் ஆப்பு... இந்திய அணியில் இடத்தை தட்டிபறிக்கும் மற்றொரு வீரர்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News