இந்த டி20 உலகக் கோப்பையில் சூர்யகுமார் யாதவிற்கு வந்து கொண்டிருக்கும் பாராட்டுகள் இன்னும் நிற்கவில்லை. அனுபவம் வாய்ந்த வீரர்கள் அணியில் பலர் இருந்தாலும், சூர்யகுமார் தனது துணிச்சலான ஷாட் மேக்கிங்கால் தனித்துவமாக தெரிகிறார். அவர் 193.96 என்ற ஸ்டிரைக் ரேட்டில் மூன்று அரைசதங்கள் உட்பட ஐந்து ஆட்டங்களில் 225 ரன்கள் அடித்துள்ளார். அசாத்தியமான ஷாட்களை ஆடும் அவரது திறமை, நிபுணர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸுடன் ஒப்பிட்டு வந்தனர். 'Mr 360' என்றால் அது டிவில்லியர்ஸ் மட்டுமே இருக்க முடியும் என்று சூர்யகுமார் யாதவ் சமீபத்தில் கூறினார்.
மேலும் படிக்க | IND vs ENG Semifinal: மழை வந்தால் இந்தியா பைனலுக்கு தகுதியா?
இந்த ஒப்பிடலுக்கு ஏபி டி வில்லியர்ஸ் பதில் அளித்துள்ளார். "அவர் புதிய 360, ஆனால் நான் இன்னும் அசல். அந்த புனைப்பெயரை என்னிடமிருந்து பறிக்காதீர்கள். அந்த பையனுக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவருக்கு நிறைய திறன்கள் கிடைத்துள்ளன" என்று டிவில்லியர்ஸ் ஒரு வீடியோவில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. சமீபத்திய ஆட்டங்களில் சூர்யகுமாரின் சிறப்பான ஆட்டத்தால் ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பெற்றார். இந்த ஆண்டு 28 டி20 இன்னிங்ஸ்களில், சூர்யகுமார் 44.60 சராசரியில் 1,026 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு சதம் மற்றும் ஒன்பது அரைசதங்கள் அவரது பேட்டிலிருந்து வெளிவந்துள்ளன(சிறந்த ஸ்கோர் 117).
I think he saw Twitter comparison btw him and Surya pic.twitter.com/wI5m3Rj0Jg
— SUPRVIRAT (@ishantraj51) November 9, 2022
இந்த ரன்கள் அனைத்தும் 186.24 என்ற அபார ஸ்ட்ரைக் ரேட்டில் வந்தன. ஒரு காலண்டர் ஆண்டில் 1,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய வீரர் மற்றும் டி20 வரலாற்றில் இரண்டாவது வீரர் சூர்யகுமார் ஆவார். வியாழக்கிழமை இன்று அரையிறுதியில் இந்தியா இங்கிலாந்தை எதிர்கொள்ளும் போது அவரது ஆட்டத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர். சூர்யகுமாரை உங்களுடன் ஒப்பிட இது சரியான நேரமா என்று டி வில்லியர்ஸிடம் கேட்டபோது, "ஆம் அவர் சரியானவர், அவர் செய்ய வேண்டிய ஒரே விஷயம் போட்டிகளில் கவனம் செலுத்துவது தான். அவர் இதை 5 முதல் 10 ஆண்டுகள் வரை செய்ய வேண்டும்" என்று கூறினார்.
மேலும் படிக்க | Haris Rauf: ஹரீஸ் ரவூஃப் பிறந்த நாளில் பிராங் செய்த ஷாகீன் அப்ரிடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ