மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களை விளையாட தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், முதல் டி20 போட்டி கடந்த செப். 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இரண்டாவது டி20, கௌகாத்தியில் பர்சபரா மைதானத்தில் இன்று நடக்கிறது. இப்போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா, இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். தென்னாப்பிரிக்க அணி சார்பில் ஷம்ஸிக்கு பதிலாக லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 237 ரன்களை குவித்தனர். அதிகபட்சமாக சூர்யகுமார் 61 (22) ரன்களையும், கேஎல் ராகுல் 57 (28) ரன்களையும் குவித்தனர். தென்னாப்பிரிக்கா பந்துவீச்சில் கேசவ் மகாராஜ் மட்டும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
238 என்ற இமலாய இலக்குடன் தென்னாப்பிரிக்க தொடக்க வீரர்களான கேப்டன் டெம்பா பவுமா மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் களமிறங்கினர். கடந்த போட்டியை போலவே, 2ஆவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், டெம்பா பவுமாவின் விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து, அதே ஓவரின் நான்காவது பந்தில் ரிலீ ரோசோவ் விக்கெட்டையும் வீழ்த்தி, தென்னாப்பிரிக்க அணிக்கு அழுத்தத்தை கொடுத்தார்.
மேலும் படிக்க |இந்திய அணி அறிவிப்பு : ஷிகர் தவான் கேப்டன்... முகேஷ் குமார் அறிமுகம் - யார் இவர்?
India on top as required run rate shoots up #INDvSA | Scorecard: https://t.co/jYtuRUcl0f pic.twitter.com/XEFt2zkamV
— ICC (@ICC) October 2, 2022
இதையடுத்து, ஒளி கோபுரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 15 நிமிடங்களுக்கு மேலாக ஆட்டம் தடைப்பட்டு, பின்னர் மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து, பவர்பிளே முடிவில் தென்னாப்பிரிக்க அணி 45 ரன்களை எடுத்து 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்தது. பவர்பிளே முடிந்த அடுத்த ஓவரிலேயே, மார்க்ரம் 33 (19) ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை அக்சர் படேல் வீழ்த்தினார்.
இதையடுத்து, களத்தில் இருந்த தொடக்க வீரர் டி காக் உடன் அதிரடி வீரர் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி, இந்திய பந்துவீச்சை சிதறடித்தது. அஸ்வின் வீசிய 12ஆவது ஓவரிஸ் 19 ரன்கள், அர்ஷ்தீப் வீசிய 14ஆவது ஓவரில் 15 ரன்கள், அக்சர் படேல் வீசிய 15ஆவது ஓவரில் 18 ரன்கள் என இந்த ஜோடி ரன் வேகத்தை அதிகரித்தது. ஹர்ஷல் படேலின் ஓவரையும் இந்த ஜோடி ஒரு பதம் பார்க்க, 17ஆவது ஓவரை தீபக் சஹார் வீசினார்.
அந்த ஓவரில் ஒரு பவுண்டரி உள்பட 8 ரன்களை மட்டுமே தீபக் சஹார் கொடுக்க, தென்னாப்பிரிக்காவுக்கு 3 ஓவர்களில் 74 ரன்கள் தேவைப்பட்டது. 18ஆவது ஓவரை ஹர்ஷல் படேல் வீசி ஒரு சிக்ஸர் உள்பட 11 ரன்களை கொடுத்தார். எனவே, தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி அதிகமானது. 2 ஓவர்களில் 63 தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார்.
A brilliant hundred from Miller #INDvSA | Scorecard: https://t.co/jYtuRUcl0f pic.twitter.com/hMlJxs4OjI
— ICC (@ICC) October 2, 2022
அந்த ஓவரில், மில்லர் 2 சிக்ஸர்களையும், 2 பவுண்டரிகளையும் பறக்கவிட்டு மொத்தம் 26 ரன்களை குவித்து மிரட்டினார். இருப்பினும், கடைசி ஓவரில் 37 ரன்கள் தென்னாப்பிரிக்காவுக்கு தேவைப்பட்டது. ஹர்ஷல் படேல் கடைசி ஓவரை வீசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இடதுகை சுழற்பந்துவீச்சாளர் அக்சர் படேல் பந்துவீச வந்தார். அந்த ஓவரின் 2ஆவது, 3ஆவது பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட மில்லர், சர்வதேச டி20 போட்டிகளில் தனது 2ஆவது சதத்தை பதிவு செய்தார். மேலும், அந்த ஓவரில் மொத்தம் 20 ரன்கள் குவிக்க, தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்களை எடுத்தது.
இதன்மூலம், 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இந்த போட்டியை வென்றது மட்டுமில்லாமல், 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியுள்ளது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக மில்லர் 47 பந்துகளில் 8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என 106 ரன்களை குவித்தார். ஆட்ட நாயகனாக கேஎல் ராகுல் தேர்வானார்.
மேலும் படிக்க | T20 World Cup: பும்ரா விலகல்-னு யாரு சொன்னா? டிராவிட் கொடுத்த மெகா அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ