இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கடைசி நாளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினால் வெற்றி பெறலாம் என்ற சூழலில் இந்திய அணி களமிறங்கியது. 272 ரன்கள் எடுத்திருந்த வங்கதேசம் அணி 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. களத்தில் இருந்த ஷகிப் அல்ஹசனும், மெஹடி ஹசன் மிர்சாவும் 5வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். போட்டியின் தொடங்கியது முதலே இந்திய பந்துவீச்சாளர்கள் ஆவேச தாக்குதலை தொடர்ந்தனர்.
மேலும் படிக்க | ஐபிஎல் ஒளிபரப்பிலும் கடையை போட்ட ஜியோ! இனி இலவசமாக பார்க்கலாம்
வங்கதேச அணி 283 ரன்கள் எட்டியபோது 8வது விக்கெட்டை பறிகொடுத்தது. மெஹடி ஹசன் மிர்சா இந்திய அணியின் முகமது சிராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அவருக்கு பிறகு வந்த வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தனி ஒருவனாக களத்தில் இருந்து போராடிக் கொண்டிருந்த ஷகிப் அல்ஹசனும் 84 ரன்கள் எடுத்தபோது குல்தீப் யாதவ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
முடிவில் வங்கதேச அணி 324 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் டெஸ்டில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஒரு கேப்டனாக கே.எல்.ராகுலுக்கு இது முதல் வெற்றியாகும். இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் மொத்தம் 8 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். ஆட்டநாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 22 மாதங்களுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த அவர் சிறப்பான பந்துவீச்சு மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மேலும் படிக்க | ஐபிஎல் அவருக்கு சரிப்பட்டு வராது - சொல்வது தினேஷ் கார்த்திக்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ