இங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 329 ரன்கள் எடுத்துள்ளது!
இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாட்டிகமில் கடந்த ஆகஸ்ட்., 18-ஆம் நாள் துவங்கியது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் (35) மற்றும் கே.எல் ராகுல் 23 ரன்கள் எடுத்து சுமாரான துவக்கம் கொடுத்தனர். இதன் பின்னர் வந்த சித்தேஸ்வர் புஜாரா 31 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்து வெளியேறினார். உணவு இடைவேளை வரை 83/3 என்ற நிலையில் இருந்தது. கோஹ்லி, ரஹானே இருவரும் களத்தில் இருந்தனர்.
அதன் பின் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி மிக நேர்த்தியாகவும் நிதானமாகவும் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்தின் பந்துவீச்சை அனாயசமாக ஆடினார். இங்கிலாந்து எவ்வளவோ முயற்சித்தும் விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை. தேநீர் இடைவேளை வரை, ரஹானே 53 ரன்களும், கோஹ்லி 51 ரன்களை எடுத்து ஆடி வந்தனர்.
மிகவும் நிதானத்தை வெளிப்படுத்திய ரஹானே மற்றும் கோஹ்லி இருவரும் சதம் அடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 81 ரன்களுக்கு வெளியேறி ரஹானே ஏமாற்றினர். அதனை தொடர்ந்து 97 ரன்களுக்கு கேப்டன் ரஷீத் பந்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக பண்டியா 18 ரன்களுக்கு வெளியேற முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 307/6 என இருந்தது. இதனையடுத்து ஆட்டத்தின் இரண்டாம் நாள் இன்று துவங்கியது. இந்திய வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற 94.5 வது ஓவரில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கவுள்ளது!