IND vs WI, Indian Squad: வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மேற்கு இந்திய தீவுகளில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் அடங்கிய மூன்று தொடர்களை இந்தியா அங்கு விளையாட உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு இந்த தொடர் நடைபெறுவதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. மேலும், இந்திய அணியில் பெரும் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. ஜூலை 12ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடருக்கு பின், ஒருநாள் தொடர் ஜூலை 27ஆம் தேதி தொடங்குகிறது. அதன்பின், டி20 தொடர் ஆக. 3ஆம் தேதி தொடங்குகிறது.
ஜெய்ஸ்வால் அறிமுகம்
இந்நிலையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. இந்த இரண்டு தொடரிலும் ரோஹித் சர்மா கேப்டனாக தொடர்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பிளேயிங் லெவனில் விளையாடி புஜாரா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அவர் காத்திருப்பு வீரராக இருந்தார். உள்ளூர் போட்டிகளில் அவர் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புது வேகப்பந்துவீச்சு படை
டெஸ்ட் பந்துவீச்சை பார்க்கும்போது, ஷமி, உனத்கட் ஆகியோருக்கு வேகப்பந்துவீச்சை தலைமை தாங்க உள்ளனர். ஷமி, பும்ரா ஆகியோருக்கு இல்லாததை தொடர்ந்து, முகேஷ் குமார், நவ்தீப் சைனி ஆகியோரும் வேகப்பந்துவீச்சு படையில் இணைந்துள்ளனர். அதேபோல், ரஹானே, கேஎஸ் பரத் ஆகியோருக்கு இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இஷான் கிஷனும் அணியில் இருப்பதால் யாரை விக்கெட் கீப்பராக அறிவிப்பார்கள் என்பதும் போட்டியின்போது தான் தெரியவரும். இருப்பினும், இஷான் கிஷானுக்கே அதிக வாய்ப்பு இருக்கிறது. சுழற்பந்துவீச்சில் அஸ்வின் - ஜடேஜா - அக்சர் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
NEWS - India’s squads for West Indies Tests and ODI series announced.
TEST Squad: Rohit Sharma (Capt), Shubman Gill, Ruturaj Gaikwad, Virat Kohli, Yashasvi Jaiswal, Ajinkya Rahane (VC), KS Bharat (wk), Ishan Kishan (wk), R Ashwin, R Jadeja, Shardul Thakur, Axar Patel, Mohd.… pic.twitter.com/w6IzLEhy63
— BCCI (@BCCI) June 23, 2023
மிடில் ஆர்டருக்கு யார் பொறுப்பு?
இந்தாண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்ந்து, ஒருநாள் தொடருக்கான அணி மீது பல எதிர்பார்ப்புகள் இருந்தது. குறிப்பாக, கேஎல் ராகுல், ஷ்ரேயஸ் ஐயர் காயத்தால் யாரை கொண்டு மிடில் ஆர்டரை சமாளிக்கப்போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது. உலகக்கோப்பை தொடருக்கு முன் துணை கண்டத்தில் நடைபெற உள்ள 50 ஓவர் ஆசிய கோப்பையும் இதனால் தான் அதிக கவனம் பெற்றுள்ளது எனலாம்.
India’s ODI Squad: Rohit Sharma (Capt), Shubman Gill, Ruturaj Gaikwad, Virat Kohli, Surya Kumar Yadav, Sanju Samson (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Shardul Thakur, R Jadeja, Axar Patel, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Jaydev Unadkat, Mohd. Siraj, Umran Malik, Mukesh… pic.twitter.com/PGRexBAGFZ
— BCCI (@BCCI) June 23, 2023
கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் மிடில் ஆர்டரில் மிரட்டிய ஆக வேண்டும். பந்துவீச்சை பொறுத்தவரை சிராஜ், முகேஷ் குமார், உனத்கட் உடன் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியாவின் வருகையால் ஆறாவது பந்துவீச்சாளர் அணிக்கு கிடைக்கலாம். ஜடேஜா - அக்சர் படேல் - சாஹல் - குல்தீப் யாதவ் என சுழற்பந்துவீச்சு படையும் பலமாகவே காணப்படுகிறது. ஷமிக்கு இதிலும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்படும் வீரர்கள்?
அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டு தொடரிலும் அவரை தேர்வுக்குழு கண்டுக்கொள்ளவில்லை. மேலும், சர்ஃபராஸ் கான் உள்ளிட்ட ரஞ்சியில் கலக்கிய வீரர்களுக்கு இதிலும் வாய்ப்பு வழங்கப்படாதது ஏமாற்றமளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே, கேஎஸ் பாரத், இஷான் கிஷன், ஆர்.அஷ்வின், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல் , முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனத்கட், நவ்தீப் சைனி.
ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன் (வி.கே), ஹர்திக் பாண்டியா (விசி), ஷர்துல் தாக்கூர், ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல் , குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.
மேலும் படிக்க | ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாசிய ஆர்சிபி வீரர்! அடுத்த கோப்பை இவங்களுக்கு தானா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ