17:12 17-01-2020
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய ஆறு விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 341 ரன்கள் தேவை. ஜடேஜா* 20(16) மற்றும் முகமது ஷமி* 1(1) அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர். ராகுல் 80(52) ரன்கள் எடுத்து ரன்-அவுட் ஆனார்.
ஆஸ்திரேலியா அணி சார்பில் ஆடம் ஜாம்பா மூன்று விக்கெட்டும், கேன் ரிச்சர்ட்சன் இரண்டு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
Innings complete! India finish on a daunting 6-340.
Exciting chase coming up! #INDvAUS scorecard: https://t.co/LnM6ajt4Zs pic.twitter.com/tWTvOZLtvS
— cricket.com.au (@cricketcomau) January 17, 2020
16:33 17-01-2020
தற்போதைய நிலவரப்படி இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 45 ஓவரில் 287 ரன்கள் எடுத்துள்ளது. அரைசதம் கடந்த வீராட் 78(76) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது லோகேஷ் ராகுல் 44(34) மற்றும் ஜடேஜா 5(3) ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்கள்.
ராஜ்கோட்: ஆஸ்திரேலியா (Australia) மற்றும் இந்தியா (India) மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் (Rajkot ODI) உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததால், இந்திய அணி முதலில் களம் இறங்கியது.
முதல் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்விடைந்த இந்திய அணிக்கு (Team India), இன்றைய ஆட்டம் மிகவும் முக்கியம் என்பதால், தொடக்க வீரர்களாக வந்த ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் ஷிகர் தவான் (Shikhar Dhawan) நிதானமாக ஆட்டத்தை தொடங்கினார்கள். அதேநேரத்தில் அதிரடியாகவும் இருவரும் விளையாடினார்கள். 81 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இந்தியா இழந்தது. ரோஹித் 42(44) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவர் இன்னும் நான்குகள் ரன்கள் எடுத்திருந்தால் சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரையன் லாரா ஆகியோரின் சாதனைகளை பின்னுக்கு தள்ளி, ஒருநாள் போட்டியில் 9000 ரன்கள் எடுத்த பட்டியலில் மூன்றாவது வீர்ராக இடம் பிடித்திருப்பர். ஆனால் இன்றைய போட்டியில் அவ்வாறு நடக்கவில்லை.
மறுபுறம் சதத்தை நோக்கி சென்ற ஷிகர் தவான் 96(90) ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து கேப்டன் விராட் கோலியுடன் சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் வெறும் 7(17) ரன்னில் அவுட் ஆனார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.