IND vs SL 1st ODI: இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயமணம் மேற்கொண்டுள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியதை அடுத்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்க உள்ளது. டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையேற்ற நிலையில், ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா இத்தொடரை வழிநடத்த உள்ளார்.
மேலும், விராட் கோலி, கேஎல் ராகுல், ஷமி உள்ளிட்டோர் அணிக்கு திரும்பியுள்ளனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பும்ரா உடற்தகுதியை காரணம்காட்டி தொடரில் இருந்து விலக்கப்பட்டுள்ளார். இதனால், மீண்டும் இந்திய அணிக்கு பந்துவீச்சுக்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
The two Captains pose with the silverware ahead of the 1st ODI.
Who do you reckon will take this home?
Live action coming up shortly. Stay tuned!https://t.co/262rcUdafb #INDvSL @mastercardindia pic.twitter.com/bM6FLnxk9R
— BCCI (@BCCI) January 10, 2023
ஒருநாள் போட்டியில் அதிக கவனம்
மேலும், இந்தாண்டு இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ள நிலையில், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் அதிகம் கவனம் செலுத்த உள்ளது. அதவாது உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக 35 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாட இருக்கிறது.
எனவே, ஒருநாள் போட்டிக்கான அணியை வலுவாக அமைப்பதில் இந்திய கடும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், இலங்கை அணியுடனான இந்த தொடரும், அடுத்த நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரும் இந்தியாவுக்கு முக்கியமான ஒன்று.
கடந்த மாதம், வங்கதேசத்திடம் அவர்கள் மண்ணில் ஒருநாள் தொடரை இழந்த இந்தியா அதிலிருந்து மீண்டெழு முயற்சிக்கும். இந்நிலையில், இலங்கை அணியுடனான இன்றைய ஒருநாள் போட்டி அதிக எதிர்பார்ப்புகளை கிளப்பியுள்ளது.
இஷான் இரட்டை சதம் வேஸ்டா...?
அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள பார்ஸாபாரா மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. ஆனால், இந்திய அணியின் பிளேயிங் லெவன் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக மூத்த வீரர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இப்போட்டியில், வங்கதேசத்திற்கு எதிராக இரட்டை சதம் அடித்த இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்காமால், கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கியிருப்பது ஏற்கத்தக்கது அல்ல என ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அணியில் கில் இருக்க வேண்டும் என நினைக்கும்போது, கேஎல் ராகுல் பெஞ்சில் வைத்துவிட்டு இஷானை மிடில் ஆர்டரில் இறக்குவது தான் சரியாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
அதேபோன்று, சூர்யகுமார் யாதவும் நல்ல பார்மில் இருந்தாலும் அவரை அணியில் புகுத்த தகுந்த இடம் இல்லாமல் இந்தியா திணறி வருகிறது. இந்திய அணி இதுபோன்ற தவறுகளை தொடர்ந்து செய்து வருவதாக ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
பிளேயிங் லெவன்
இலங்கை: பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துனித் வெல்லலகே, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க
இந்தியா: ரோஹித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், முகமது ஷமி, உம்ரான் மாலிக், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ