புது டெல்லி: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் (India vs West Indies) அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி 20 போட்டி (Mumbai T20) கடந்த புதன்கிழமை (டிசம்பர் 11) வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடர் கைப்பற்றியது. இதனையடுத்து நாளை இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் போட்டி ஆரம்பமாக உள்ளது. அதற்கான இரண்டு அணிகளும் சென்னைக்கு வந்துள்ளனர். ஏனென்றால், முதல் ஒரு நாள் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 டி-20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டி 20 தொடர் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியை எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் (West Indies) வென்றதன் மூலம் தொடர் சமநிலையை அடைந்தது. இதனால் கடைசி மற்றும் மூன்றாவது டி 20 போட்டியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. 3வது T-20 போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி-20 தொடரை கைப்பற்றி உள்ள இந்திய அணி வீரர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்தநிலையில், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்க உள்ளது.
முதல் ஒரு நாள் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை நடைபெற உள்ளது. குளிர் காலநிலையில் இங்கே போட்டி நடைபெறுவதால்,, ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்றதாக இருக்கும். அதேவேளையில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆடுகளம் சாதகமாக இருக்கும். இந்த மைதானத்தில் விளையாடிய கடந்த இரண்டு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்ய அணிக்கு மைதானம் சாதகமாக இருந்தது. இந்த முறையும் அப்படியே இருக்குமா? ஏற்றுஎன்று தெரியவில்லை. அதற்காக டிசம்பர் 15 வரை காத்திருக்க வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டீம் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 9 போட்டிகள் நடந்துள்ளன. இவற்றில், மேற்கிந்திய தீவுகள் அணியால் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெல்ல முடிந்தது. 2018 ஆம் ஆண்டில், மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவுக்கு விஜயம் செய்தபோது. ஐந்து ஒருநாள் போட்டி தொடரில் விளையாடியது. அதில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டியை மேற்கிந்திய தீவுகள் வென்றது மற்றும் ஒரு போட்டி சமநிலையில் முடிந்தது. இதன் பின்னர், ஐ.சி.சி உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை இந்தியா அணி தோற்கடித்தது, பின்னர் மேற்கிந்திய தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் வென்றது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.