Indian Cricket Team: வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் ஐசிசி உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. நவம்பர் 19ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது. 2011ஆம் ஆண்டுக்கு பின் கோப்பையை வெல்ல இந்திய அணியும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட முன்னணி அணிகளும் கடுமையான போட்டியை அளிக்கும். உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணி, ஆசிய கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் அணியாக உள்ளது.
ஆசிய கோப்பைக்கான ஆயத்தப் பணிகளில் இந்திய அணி இறுதிக் கட்டத்தில் உள்ளது. இந்திய வீரர்கள் தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் யோ-யோ சோதனை நடத்தும் முகாமில் கலந்து கொள்கின்றனர். இளம் தொடக்க வீரரான சுப்மான் கில் 18.7 மதிப்பெண்களுடன் யோ-யோ சோதனையில் முதலிடம் பிடித்துள்ளார். இதுவரை யோ-யோ டெஸ்டில் பங்கேற்ற அனைத்து கிரிக்கெட் வீரர்களும் கட்-ஆஃப் லெவலான 16.5-ஐ கடந்துள்ளனர். விராட் கோலியும் 17.2 புள்ளியை பதிவு செய்தததாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
ஐந்து இந்திய கிரிக்கெட் வீரர்களான ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், கே.எல்.ராகுல் ஆகியோர் இன்னும் யோ-யோ சோதனையை மேற்கொள்ளவில்லை. இவர்கள் விரைவில் யோ-யோ சோதனைக்கு உள்ளாகியுள்ளனர். ஆசியக் கோப்பைக்கு செல்லும் இந்திய அணி பெங்களூருவில் முகாமில் களமிறங்கியது, அங்கு ஆக. 30ஆம் தேதி தொடங்கும் ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் வழக்கமான உடற்தகுதி சோதனைகளுக்கு உட்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க | பாகிஸ்தான் கூட உலக கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ளது - கங்குலி
யோ-யோ சோதனையானது ஏரோபிக் சகிப்புத்தன்மை ஃபிட்னஸ் சோதனையாகும், நீங்கள் கடைசியாக விளையாடிய நேரம் மற்றும் கடந்த வாரத்தில் நீங்கள் எவ்வளவு பணிச்சுமையைச் சந்தித்தீர்கள் என்பதில் இருந்து முடிவுகள் மாறுபடும். இப்போது கில் 18.7 என்ற அதிகபட்ச ஸ்கோர் பெற்றுள்ளார். பெரும்பாலான வீரர்கள் 16.5 மற்றும் 18-க்கு இடையில் ஸ்கோர் செய்துள்ளனர் என்று தகவல்கள் கூறப்படுகின்றன.
அக்டோபரில் சொந்த மண்ணில் நடக்கும் உலகக் கோப்பைக்கு முன் இதுதான் ஒரே வாய்ப்பு என்பதால், பிசிசிஐ ஃபிட்னஸ் மற்றும் கண்டிஷனிங் முகாமை ஏற்பாடு செய்துள்ளது. "வீரர்களுக்கு இரண்டு போட்டிகளுக்கு இடையே இடைவெளி இருந்தால், இந்திய அணியின் விளையாட்டு ஊழியர்களுடன் தேசிய கிரிக்கெட் அகாடமியின் விளையாட்டு அறிவியல் குழு அனைத்து கட்டாய சோதனைகளையும் நடத்துகிறது" என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஃபிட்னஸ் மற்றும் கண்டிஷனிங் பயிற்சியாளர் சங்கர் பாசு, "ஆறு ஆண்டுகளுக்கு முன்பு யோ-யோ சோதனைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, கட்-ஆஃப் 16.1 ஆக இருந்தது, ஆனால் அதன் பிறகு மார்க்கர் மேம்படுத்தப்பட்டு தற்போது 16.5 ஆக உள்ளது" என்றார். இந்திய இளம் வீரர்களில் பெரும்பாலானோர் தற்போது மிகவும் உடற்தகுதியுடன் உள்ளனர். கில்லின் 18.7 ஐபிஎல் தொடங்கியதில் இருந்து இடைவிடாத கிரிக்கெட்டில் விளையாடியதைக் கருத்தில் கொண்டு அதற்கு ஒரு சான்றாகும். மேற்கிந்தியத் தீவுகளில் 50 ஓவர்கள் கொண்ட தொடரை முடித்த மூன்று வாரங்களில் மார்ச் மாதத்திற்குப் பிறகு அவருக்கு கிடைத்த முதல் பெரிய இடைவெளி இதுவாகும்.
மேலும் படிக்க | செம பவுலிங் லைன்அப்பில் பாகிஸ்தான்..! இந்திய அணிக்கு எச்சரிக்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ