INDvsSA: ஸ்ரேயாஸ் செய்த தவறால் தோல்வியடைந்த இந்திய அணி

ஸ்ரேயாஸ் அய்யர் செய்த தவறால் இந்திய அணி தோல்வியை தழுவியது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 10, 2022, 09:38 AM IST
  • முதல் 20 ஓவர் போட்டியில் இந்தியா தோல்வி
  • ஸ்ரேயாஸ் அய்யர் செய்த தவறு காரணம்
  • இணையத்தில் திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
INDvsSA: ஸ்ரேயாஸ் செய்த தவறால் தோல்வியடைந்த இந்திய அணி title=

இந்தியா- தென்னாப்பிராக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் தொடங்கியுள்ளது. மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் காயம் காரணமாக கடைசி நேரத்தில் தொடரில் இருந்து விலகினார். இதனால் ரிஷப் பன்ட் தலைமையிலான இளம் படையைக் கொண்ட இந்திய அணி, தென்னாப்பிரிக்கா அணியை முதல் 20 ஓவர் போட்டியில் எதிர்கொண்டது. 

மேலும் படிக்க | விராட் கோலியின் சாதனையை தகர்த்த பாகிஸ்தான் வீரர்

டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டபோதும், பீல்டிங்கில் சொதப்பி படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 211 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 76 ரன்கள் எடுக்க, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோரின் பங்களிப்பால் இந்திய அணி சவாலான இலக்கை நிர்ணயித்தது.

பேட்டிங்கில் ஜொலித்ததுபோலவே பந்துவீச்சிலும் இந்திய அணி ஜொலிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், மைதானத்தில் நடைபெற்றதெல்லாம் தலைகீழாக இருந்தது. தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்கள், அடுத்து ரன்களை வாரி வழங்கினர். வான்டர் டசன் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் இந்திய அணியின் பந்துவீச்சை மைதானத்துக்கு வெளியில் அடிப்பதையே குறியாக வைத்திருந்தனர்.

இந்த நேரத்தில் வாண்டெர் டெசன் அழகான கேட்ச் ஒன்றை மிட்விக்கெட் திசையில் கொடுத்தார். அங்கு பீல்டிங்கில் இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் எளிதாக பிடித்துவிடுவார் என நினைத்த தருணத்தில் கோட்டைவிட்டார். இது ரசிகர்களை மட்டுமல்லாமல் மைதானத்தில் இருந்த வீரர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த ஒரு வாய்ப்புக்குப் பிறகு அடுத்த வாய்ப்பை தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் கொடுக்கவே இல்லை. நாலாபுறமும் பந்துகளை சிதறடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஃபார்மில் இருக்கும் மில்லர், 64 ரன்களும், டெசன் 75 ரன்களும் குவித்தனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்கா அணி முன்னிலை வகிக்கிறது. 

மேலும் படிக்க | Pakistan Cricket: தடைக்குப் பிறகு திரும்பும் பாகிஸ்தானின் புயல்வேக பந்துவீச்சாளர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News