இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த நவ., 24-ஆம் தேதி நாக்பூரில் தொடங்கி நடைபெற்று வந்தது.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இந்திய வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் தடுமாறிய இலங்கை அணி 205 ரன்களுக்கு தனது அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி சார்பில் இஷாந்த் ஷர்மா, ஜடேஜா தலா மூன்று விக்கெட்டும், அஸ்வின் நான்கு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்
பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸை துவங்கிய இந்தியா சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது.
முதல் ஆட்டம் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டத்தை ஆடிய இந்தியா இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்தது. புஜாரா 121 ரன்களுடனும், விராட் கோலி 54 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் ஆட்டத்தின் மூன்றாம் நாள் நேற்று துவங்கியது. நிதானமாக விளையாடிய இந்திய அணி வீரர்கள், இந்திய அணியின் எண்ணிக்கையினை 600-க்கு எடுத்துச் சென்றனர். 174 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 610 ரன்கள் எடுத்தது.
இந்த எண்ணிக்கையானது இலங்கையைவிட 405 ரன்கள் அதிகாகும். இந்தியாவின் இந்த முதல் இன்னிங்ஸில் கேப்டன் கோலி 213(267), புஜாரா 143(362), முரளி விஜய் 128(221), மற்றும் ரோகித் சர்மா 102*(160) ரன்கள் எடுத்தனர். ரோகித்தின் சதத்திற்கு பின்னர் இந்தியா தனது முதல் இன்னிங்ஸை டிக்லர் செய்து கொண்டது.
இதனையடுத்து இலங்கை தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கி விளையாடியது. ஆரம்பமே சருக்கலாய் இலங்கை தனது முதல் விக்கெட்டை விரைவிலேயே இழந்தது.
மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை 9 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்துள்ளது. திருமானே 9(22) மற்றும் கருணரத்னே 11(30) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இதனையடுத்து ஆட்டத்தின் நான்காம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது. ஆட்டம்துவங்கியது முதலே இலங்கை விக்கெட்டுகள் சரசரவென விழ தொடங்கியது.
இந்நிலையில், இலங்கை அணி 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதன் மூலம் இந்தியா இன்னிங்ஸை வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாகா அந்த அணியின் கேப்டன் தினேஷ் சந்திமால் 61 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட் எடுத்தனர். அஸ்வின் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த வெற்றி மூலம் இந்திய டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.