ஐபிஎல் 2017: கொல்கத்தாவை வீழ்த்திய மும்பை புள்ளி பட்டியலில் முதலிடம்

Last Updated : May 14, 2017, 10:33 AM IST
ஐபிஎல் 2017: கொல்கத்தாவை வீழ்த்திய மும்பை புள்ளி பட்டியலில் முதலிடம் title=

நேற்றைய இரவு 8 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட்

டாஸ் ஜெயித்த கொல்கத்தா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. தனது பேட்டிங் தொடங்கிய மும்பை அணியின் சவுரப் திவாரி, சிமோன்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். சிமோன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். 

இதைத்தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா, சவுரப் திவாரியுடன் இணைந்தார். இருவரும் சிறப்பாக ஆடினார்கள். ரோகித் சர்மா 27 ரன் எடுத்த நிலையில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து அம்பத்தி ராயுடு, சவுரப் திவாரியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது.  

சவுரப் திவாரி தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 43 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 52 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இதனை அடுத்து அம்பத்தி ராயுடுவும் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். அம்பத்தி ராயுடு 37 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 

கடைசியாக 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி சார்பில் டிரென்ட் பவுல்ட் 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், அங்கித் ராஜ்பூத் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி வீரர்களின் விக்கெட்டு மளமளவென வீழ்ந்தது. இந்த அணியில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 33 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் குறைவான ரன்களில் ஆட்டம் இழந்தனர். எனவே கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 164 ரன்களே எடுத்தது. இதனால் மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்து கொண்டது. தோல்வியை சந்தித்த கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 2_வது இடத்தில் இருந்து 3_வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆனாலும் கொல்கத்தா அணி தனது பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது. 

 ரைடர்ஸ் அணிகள் மோதின.

நேற்றைய போட்டியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன, அதாவது கொல்கத்தா அணியில் கிறிஸ் வோக்ஸ்க்கு பதிலாக டிரென்ட் பவுல்ட் சேர்க்கப்பட்டார். மும்பை அணியில் மலிங்கா, நிதிஷ் ராணா, பார்த்தீவ் பட்டேல், மெக்லெனஹான், ஜஸ்பிரித்சிங் பும்ரா, ஹர்பஜன்சிங் ஆகியோருக்கு பதிலாக, அம்பத்தி ராயுடு, சவுரப் திவாரி, குணால் பாண்ட்யா, வினய்குமார், டிம் சவுதி, மிட்செல் ஜான்சன் ஆகியோர் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Trending News