10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.
இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்சை பந்தாடிய கொல்கத்தா அணி, மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியின் விளிம்பில் இருந்து கடைசி நேரத்தில் தோல்வியை தழுவியது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தனது முதல் இரு ஆட்டங்கள் முறையே புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளை எளிதில் வீழ்த்தியது. புதிய கேப்டன் மேக்ஸ்வெல்லின் அதிரடியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சாளர்கள் இரு ஆட்டங்களிலும் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். ‘ஹாட்ரிக்’ வெற்றி முனைப்புடன் அந்த அணி களம் இறங்கியது.
நேற்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியில் அதிரடியை காட்டிய வோரா 19 பந்தில் 28 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ் 9 ரன்னிலும், தொடக்க வீரர் அம்லா 25 ரன்னிலும், கேப்டன் மேக்ஸ்வெல் 14 பந்தில் 25 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்தது.
பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய, கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய காம்பீர், நரேன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர்.
காம்பீர் 49 பந்துகளில் 11 பவுண்டரிகள் விளாசி 72 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கொல்கத்தா அணி 16.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது.
Match 11. It's all over! Kolkata Knight Riders won by 8 wickets https://t.co/58XGM5U3ZY #KKRvKXIP
— IndianPremierLeague (@IPL) April 13, 2017