08:53 PM 26-03-2019
11 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் 1 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் குவித்துள்ளது...
களத்தில் - ஷிகர் தவான் 29(32) | ஸ்ரேயஸ் ஐயர் 18(19)
07:50 PM 26-03-2019
டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 12 வது சீசன் கடந்த 23 அன்று தொடங்கி, தற்போது வரை நான்கு ஆட்டங்கள் முடிந்துள்ளது. இன்று ஐந்தாவது ஆட்டம் இரவு 8 மணிக்கு டெல்லியில் நடைபெற உள்ளது.
ஏற்கனவே முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எளிதாக வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. அதேபோல தனது முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி பெற்றது.
சென்னை அணியை பொருத்த வரை கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, சேன் வாட்சன் போன்ற மூத்த வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களை எப்படி சமாளிக்க போகிறது டெல்லி அணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி அணியை பொருத்த வரை இளம் வீரர்கள் பலர் உள்ளனர். கேப்டன் ஸ்ரீயாஸ் அய்யர், ப்ரிதீவ் ஷா, ரிஷாப் பந்த் போன்றோர்கள் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள். இவர்களை சென்னை அணி எப்படி கட்டுப்படுத்த போகிறது என்று ஆட்டத்தின் போது தான் தெரியும்.
இரண்டு அணிகளும் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று இருப்பதால், இன்றைய இரண்டாவது ஆட்டத்தில் கடும் போட்டி இருக்கும் நிலையில், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.