புதுடெல்லி: இந்தியன் பிரீமியர் லீக்கின் (Indian Premier League) அடுத்த தொடரில் பல மாற்றங்கள் நடைபெற உள்ளது. ஒரு அணியின் அடையாளமாக இருந்த பல முகங்கள், இப்போது அந்த அணியின் இருக்க மாட்டார்கள். இப்போது இந்த வீரர்களுக்கு, அவர்களின் அணியின் ஆதரவு முடிந்துவிட்டது. அந்த பட்டயலில், கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ராபின் உத்தப்பா (Robin Uthappa), பியூஷ் சாவ்லா, கிறிஸ் லின் (Chris Lynn), மும்பை இந்தியன்ஸின் யுவராஜ் சிங் (Yuvraj Singh), கிங்ஸ் லெவன் பஞ்சாபின் டேவிட் மில்லர் (David Miller) ஆகியோர் அடங்குவர். விடுவிக்கப்பட்ட வீரர்கள் இப்போது அடுத்த மாதம் நடக்க விருக்கும் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கலாம்.
டி 20 கிரிக்கெட்டின் மிகவும் பிரபலமான ஐபிஎல் லீக் தொடர் 2020 ஆம் ஆண்டுக்கான தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே - ஜூன் மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அணிகள் போட்டியில் பங்கேற்க தேவையான ஏற்பாடுகள் செய்து தயாராகி வருகிறது. ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைக்க விரும்பாத வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு கேட்டிள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு அணியும் விடுவிக்கும் வீரர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறது.
இந்த பட்டியலை பார்க்கும் போதும், அணிகள் பல முக்கிய வீரர்களின் அடையலாம் மற்ற அணிக்கு சென்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த அஜிங்க்யா ரஹானே டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு சென்றுள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் அடுத்த தொடரில் டெல்லியில் அணிக்காக விளையாடுவார். ரஹானே மற்றும் அஸ்வின் ஆகியோருக்கு பதிலாக, டெல்லி தங்கள் அணியில் உள்ள வீரர்களை ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபிற்கு ஒப்படைத்துள்ளது.
ஐபிஎல் வர்த்தக சாளரத்தின் (IPL Trade Window) கடைசி நாள் நேற்றுடன் (நவம்பர் 15) முடிந்து விட்டது. இந்த முறை மொத்தம் 73 வீரர்கள் தங்கள் ஒப்பந்தங்களை முடித்துக் கொண்டார்கள் என்பது தெளிவாகி உள்ளது. அதிகபட்சமாக 12 வீரர்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விடுவித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை 11-11 வீரர்களை விடுவித்துள்ளன. இதன் பின்னர், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 10 வீரர்களை விடுவித்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் 9, கிங்ஸ் லெவன் பஞ்சாப் 7, சென்னை சூப்பர் கிங்ஸ் 6, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5 வீரர்களை வெளிவெளியேற்றி உள்ளனர்.
ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் எட்டு அணிகளிலிருந்தும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சென்னை சூப்பர்கிங்ஸ் (Chennai Super Kings) : மோஹித் சர்மா, சாம் பில்லிங்ஸ், சைதன்யா பிஷ்னோய், டேவிட் வில்லி, துருவ் ஷோரே, ஸ்காட் குக்லிஜன்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore): கொலின் டி கிராண்ட்ஹோம், டேல் ஸ்டெய்ன், நாதன் கல்பர்-நைல், ஷிம்ரான் ஹெட்மியர், டிம் சவுதி, ஹென்ரிச் கிளாசென், மார்கஸ் ஸ்டோயினிஸ், அக்ஷ்தீப் நாத், ஹிம்மத் சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, மிலிந்த்குமார், பிரார்த்தனா ரே பர்மன்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders): ராபின் உத்தப்பா, பியூஷ் சாவ்லா, கார்லோஸ் பிராத்வைட், கிறிஸ் லின், ஜோ தெனாலி, கேசி கரியப்பா, மாட் கெல்லி, நிகில் நாயக், பிருத்வி ராஜ் யாரா, ஸ்ரீகாந்த் முந்தே, என்ரிக் நோர்டே.
ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals): ஆர்யமன் பிர்லா, ஆஸ்டன் டர்னர், ஒசேன் தாமஸ், சுபம் ரஞ்சனே, பிரசாந்த் சோப்ரா, இஸ் சோதி, ஜெய்தேவ் உனட்கட், ராகுல் திரிபாதி, ஸ்டூவர்ட் பின்னி, லியாம் லிவிங்ஸ்டன், சுதேசன் மிதூன்.
மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians): எவின் லூயிஸ், ஆடம் மில்னே, ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப், பென் கட்டிங், யுவராஜ் சிங், பாரிந்தர் சரண், ரசிக் சலாம், பங்கஜ் ஜெய்ஸ்வால், சித்தேஷ் லாட் மற்றும் அல்ஜாரி ஜோசப்.
டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals): கிறிஸ் மோரிஸ், கொலின் இங்க்ராம், கொலின் மன்ரோ, ஹனுமா விஹாரி, ஜலாஜ் சக்சேனா, மஞ்சோத் கல்ரா, நாது சிங், அங்குஷ் பெயின்ஸ், பி அய்யப்பா.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் (Kings XI Punjab): ஆண்ட்ரூ டை, டேவிட் மில்லர், மொய்சஸ் ஹென்ரிக்ஸ், பிரபாசிம்ரன் சிங், சாம் குர்ரென், வருண் சக்ரவர்த்தி, அக்னிவேஷ் அயாச்சி.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad): ஷாகிப் அல் ஹசன், யூசுப் பதான், மார்ட்டின் குப்டில், தீபக் ஹூடா, ரிக்கி பூய்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.