IPL குவாலிஃபையர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. 20 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்தது.
சென்னை அணி முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை இழந்தாலும், அடுத்து ஜோடி சேர்ந்த ருதுராஜ் மற்றும் ராபின் உத்தப்பா இணைந்து அற்புதமாக அடித்தார்கள்.
அடுத்து ருதுராஜ் மற்றும் ராபின் உத்தப்பா ஒரே ஓவரில் சூப்பர் கேட்ச்களால் அவுட்டாகி வெளியேறினார்கள். ஸ்ரேயஸின் கேட்ச் ஆட்டத்தின் போக்கில் மாற்றத்தைக் கொடுத்தது.
இறுதி ஓவர்களில் சென்னை அணியின் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ச்சியடைய, கேப்டன் தோனி தனது அதிரடி ஆட்டத்தால் ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். இறுதியில் அவர் அடித்த சிக்ஸர் போட்டியில் சென்னை அணிக்கு வெற்றி தேடிக் கொடுத்தது.
Qualifier 1. It's all over! Chennai Super Kings won by 4 wickets https://t.co/8TbvEf4Vmd #Qualifier1 #VIVOIPL #IPL2021
— IndianPremierLeague (@IPL) October 10, 2021
டெல்லி கேபிடல்ஸின் ப்ரித்வி ஷா அரைசதம் அடித்து அணிக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார். 34 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து அசத்தினார். அவருக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு கிடைத்தது. அற்புதமான சிக்ஸர்கள் அடித்தவர் என்ற பட்டத்தையும் அவர் பெற்றார்.
Read Also | அணியை ஊக்கப்படுத்தும் டெல்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்
ருதுராஜ் கேம் சேஞ்சர் ஆஃப் த மேட்ச் பட்டத்தை பெற்றார். அவருக்கு ஐந்து லட்ச ரூபாய் பரிசுத்தொகை கொடுக்கப்பட்டது. ராபின் உத்தப்பாவுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. அத்துடன் ஒரு லட்சம் ரூபாய் பரிசையும் பெற்றார்.
தொடர்ந்து இரு விக்கெட்டுகள் விழுந்தது. கடைசி சில ஓவர்களில் அற்புதமாக விளையாடி, 20 ஓவர்களில், 5 விக்கெட்டுகளை இழந்து டெல்லி கேபிடல்ஸ் அணி 172 ரன்கள் எடுத்தது. ஸ்ரேயஸ் ஒரு ரன் எடுத்து ஹேசிலின் பந்தில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் ரிஷப் பந்த் மற்றும் ஹெட்மயர் கூட்டணி அருமையாக விளையாடி அணிக்கு பலம் சேர்த்தனர். ஐபிஎல் டி20 போட்டிகளில் ரிஷப் பந்த் தனது 10வது அரைசதத்தை அடித்தார்.
Also Read | மும்பையின் மிரட்டல் அடியில் வீழ்ந்தது ஹைதராபாத்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR