இந்திய கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் ஐபிஎல் தொடர் ஆண்டுதோறும் வரலாறு காணாத உட்சத்தை அடைந்து வருகிறது. பிரபல கால்பந்து லீக்குகளுக்கு இணையான உயரத்தையும், ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவையும் பெற்று வருகிறது. 15 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் போட்டிக்கான மீடியா உரிமை புதிய தொகைக்கு, பல்லாயிரம் கோடிகள் கொட்டி வாங்கப்பட்டுள்ளதே இதற்கு சான்று.
மேலும் படிக்க | முடிந்தது ஐபிஎல் ஏலம்.. ஒளிபரப்பு உரிமையை வாங்கிய புதிய நிறுவனம்!
2023 முதல் 2027 ஆம் ஆண்டு வரையிலான ஐபிஎல் மீடியா ரைட்ஸ் உரிமையை இரண்டு நிறுவனங்கள் கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றியுள்ளன. தொலைக்காட்சி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனமும், டிஜிட்டல் மற்றும் ஓடிடி உரிமையை அம்பானிக்கு சொந்தமான வியாகாம் நிறுவனமும் கைப்பற்றியுள்ளன. இந்த ஏலத்தின் மூலம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமம் புதிய உட்சத்தைத் தொட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்திய பிசிசிஐ, பல புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.
பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா பேசும்போது, அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் இரண்டரை மாதங்களுக்கு நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறியுள்ளார். 94 போட்டிகள் நடைபெறும் என்று கூறிய ஜெய்ஷா இதுகுறித்து ஐசிசியிடமும் விவாதிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டி தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் மற்றும் பரிசீலனைகள் வந்திருப்பதாக கூறிய அவர், மற்ற நாட்டு கிரிக்கெட் அமைப்புகளிடமும் இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிவித்தார். அனைத்து சர்வதேச பிளேயர்களும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வகையில் ஐசிசி அட்டவணை அமைக்கப்படும் என்றும் ஜெய்ஷா கூறியுள்ளார்.
மேலும், மற்ற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக்குகளில் பங்கேற்கும் அணிகளுடன் ஐபிஎல் அணிகள் விளையாடுவது குறித்தும் பரிசீலனை செய்யப்படும் எனத் தெரிவித்தார். ஏற்கனவே ஐபிஎல் சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் ஐபிஎல் சார்பில் நடத்தப்பட்டன. இதில் ஐபிஎல் போட்டியில் டாப் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்ற நாட்டு லீக் அணிகளுடன் மோதும் வகையில் இந்த தொடர் இருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த தொடர் இடையே நிறுத்தப்பட்டது. இப்போது, இந்த தொடருக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் வகையில் பிசிசிஐ திட்டமிடுவதாக கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR