ஐபிஎல் 2023 பிளேஆஃப்களுக்கான பந்தயம் இப்போது இறுதி கட்டத்தில் உள்ளது. லீக் கட்டத்தின் கடைசி நாள் மே 21 ஞாயிற்றுக்கிழமை போட்டி மும்பை மற்றும் பெங்களூருவில் நடைபெற உள்ளது. மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி), ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) ஆகிய அணிகள் 4வது இடத்திற்கு போட்டி போட்டு வருகின்றனர். புள்ளிப்பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி), சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. GT vs CSK ஆட்டம் IPL 2023 பிளேஆஃப்களின் குவாலிஃபையர் 1ல் நடைபெறும். எலிமினேட்டர் போட்டிக்கான எல்எஸ்ஜியின் எதிரணி இன்றிரவு முடிவு செய்யப்படும்.
மேலும் படிக்க | IPL: சதம் அடிக்கும் திறமையால் ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்தும் ரன் மெஷின்கள் பட்டியல்
பிளேஆஃப்களில் நான்காவது இடத்திற்குப் போராடும் மூன்று அணிகள்:
ஐபிஎல் 2023 பிளேஆஃப்களுக்கு RCB எவ்வாறு தகுதி பெறலாம்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற அவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. RCB 13 போட்டிகளில் 14 புள்ளிகளை +0.180 என்ற நிகர ரன் ரேட்டுடன் பெற்றுள்ளது. பெங்களூரு அணி தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை இன்று இரவு சின்னசாமி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. RCB அணி GTக்கு எதிராக நல்ல ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். மேலும், மும்பை இந்தியன்ஸை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) தோற்கடிக்க வேண்டும்.
ஐபிஎல் 2023 பிளேஆஃப்களுக்கு மும்பை இந்தியன்ஸ் எவ்வாறு தகுதி பெற முடியும்?
மும்பை இந்தியன்ஸ் 13 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. அவர்களின் நிகர ஓட்ட விகிதம் -0.128. மும்பை அணி குஜராத்தை பெரிதும் நம்பியுள்ளது. மும்பை அணி SRH-ஐ தோற்கடிக்க வேண்டும், அதன்பிறகு குஜராத் அணி RCBயை வீழ்த்த வேண்டும்.
RR எப்படி முதல் 4 இடங்களுக்குள் நுழைய முடியும்?
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைவிதி அவர்களது கையில் இல்லை. அவர்கள் 14 போட்டிகளில் 14 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் +0.148 உடன் புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளனர். RRக்கு GT மற்றும் SRHன் உதவிகள் தேவை. ஜிடி ஆர்சிபியை ஐந்து ரன்களுக்கு மேல் தோற்கடித்து, எஸ்ஆர்எச் எம்ஐயை வீழ்த்தினால், ராஜஸ்தான் எலிமினேட்டரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக விளையாடும்.
இதற்கிடையில் முக்கியமான கடைசி போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிராக 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. மேலும் ஐபிஎல் 2023 பிளே-ஆஃப் இடத்தையும் தக்க வைத்தது. 224 ரன்கள் என்ற இமாலய இலக்கை சென்னை அணி டெல்லிக்கு வைத்தது. ஆனால் டெல்லி அணி 20 ஓவர்களில் 146/9 மட்டுமே அடித்தது. வார்னர் மட்டும் 86(58) ரன்கள் எடுத்தார், அதே நேரத்தில் மற்ற பேட்டர்கள் எவரும் 20 ரன்களை தாண்டவில்லை, அக்சர் படேலின் 15(8) DC அணியில் இருந்து இரண்டாவது அதிகபட்சமாக இருந்தது. தீபக் சாஹர் 3 விக்கெட்டுகளையும், இலங்கையின் மகிஷ் தீக்ஷனா மற்றும் மதீஷா பத்திரனா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தனர், சிஎஸ்கே 20 ஓவர்களில் 223/3 என்ற மாபெரும் ரன் குவித்தது. கெய்க்வாட் 79(50), கான்வே 87(52) ரன்களில் ஆட்டமிழந்தார்.
மேலும் படிக்க | பிளேயிங் லெவனில் மாற்றமே இருக்காது... தோனி சொன்ன காரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ