புதுடெல்லி: பாரீஸ் நகரில் இன்று ( அக்டோபர் 25 செவ்வாய்க்கிழமை ) நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்று ஆட்டத்தில் லக்ஷ்யா சென், தனது சக வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்தை எதிர்கொள்கிறார். பாரீஸ் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு தொடக்க சுற்று ஆட்டத்தில் காமன்வெல்த் கேம்ஸ் சாம்பியனான லக்ஷ்யா சென், சக வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்தை எதிர்கொள்கிறார். உலக தரவரிசையில் முறையே எட்டாவது மற்றும் 11வது இடத்தில் இருக்கும் முதல் இரண்டு இந்தியர்கள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்ஷ்யா சென் - ஸ்ரீகாந்த் இருவருமே, தங்கள் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக மோத உள்ளனர். சமீபத்தில் முடிவடைந்த டென்மார்க் ஓபனில் சிறந்த வீரராக லக்ஷ்யா சென் இருந்தபோதிலும், அவர் காலிறுதியில் ஜப்பானின் நரோகாவிடம் தோற்றார்.
தற்போது, இரண்டு இந்தியர்களுக்கும் இடையிலான இன்றையப் போட்டியில் வெற்றிப் பெறுபவர், அடுத்த சுற்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ஆண்டர்ஸ் ஆண்டன்சனுடன் மோத வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பரபரப்பான போட்டியில் வென்றது இந்தியா - பட்டையை கிளப்பிய கோலி
சமீபத்திய காலங்களில் மிகவும் நிலையான வீரராக இருந்த எச்.எஸ்.பிரணாய், மலேசியாவின் டேரன் லியூவுக்கு எதிராக முதல் சுற்றில் வெளியேறினார். இம்முறை, அவர் முதல் சுற்றில் வெற்றி பெற்றால், ஐந்தாம் நிலை வீரரான கென்டோ மொமோட்டா மற்றும் நான்காம் நிலை வீரரான சௌ தியென் சென் ஆகியோருக்கு பெரிய சவாலாக இருப்பார்.
பிரணாய், 2022 உலக சாம்பியன்ஷிப்பில் ஜப்பானிய உலகின் 9-ம் நிலை வீரரான மொமோட்டாவுக்கு எதிராக ஏழு போட்டிகளில் தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நேவால், மகளிர் ஒற்றையர் பிரிவு தொடக்கச் சுற்றில் ஜெர்மனியின் யுவோன் லியை எதிர்கொள்கிறார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பாட்மிண்டன் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி, காலிறுதியில் ஜப்பானின் டாகுரோ ஹோக்கி மற்றும் யுவோ கோபயாஷியின் முதல் நிலை இரட்டையர்களுடன் இணைந்துள்ளனர்.
இந்திய இரட்டையர் பிரிவில் எம்.ஆர்.அர்ஜுன் மற்றும் துருவ் கபிலா ஜோடி ஐந்தாம் நிலை வீரரான ஃபஜர் அல்பியன் மற்றும் இந்தோனேசியாவின் முஹம்மது ரியான் ஆர்டியன்டோவை எதிர்கொள்கிறது. மகளிர் இரட்டையர் பிரிவில் ட்ரீசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் இஷான் பட்நாகர்-தனிஷா க்ராஸ்டோ ஜோடியும் களத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க | பாகிஸ்தானை வெற்றி கொண்ட இந்திய அணி! தீபாவளி சரவெடி அதிரடி வெற்றி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ