புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மகுடத்தில் மற்றும் ஒரு வைரக் கல் சேர்ந்துள்ளது. ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் கேப்டனாக சிறந்த முறையில் செயல்பட்டார் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) என்று ஐ.சி.சி (ICC) வெளியிட்ட பட்டியல் கூறுகிறது. சில இந்திய வீரர்களும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
தோனி மற்றும் கோஹ்லி (Virat Kohli) தவிர, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து (England), தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளின் சிறந்த வீரர்களும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
ICC MEN'S T20I TEAM OF THE DECADE
How many could this side score in 20 overs?#ICCAwards pic.twitter.com/qaKFPGkkqA
— ICC (@ICC) December 27, 2020
முன்னாள் இந்திய கேப்டனும், விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுமான மகேந்திர சிங் தோனி ஐ.சி.சி.யின் Team of the Decade பட்டியலில் வரையறுக்கப்பட்ட ஓவர்களில் சிறப்பாக செயல்பட்ட கேப்டனாக முதலிடம் பிடித்துள்ளார். கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் வீரர்களின் செயல்திறன், நிலைத்தன்மையின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இந்த பட்டியலை அறிவித்துள்ளது.
ஒருநாள் போட்டி (ODI) மற்றும் டி-20 (T20) என வரையறுக்கப்பட்ட ஓவர்களில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டவர் எம்.எஸ். தோனி என்று இந்த பட்டியல் கூறுகிறது. அதுமட்டுமல்ல, சிறந்த விக்கெட் கீப்பராகவும் மகேந்திர சிங் தோனி செயல்பட்டுள்ளார். எனவே ICC Men's Team of the Decade பட்டியலில் முதலிடம் நம்ம தல தோனிக்கே!
Also Read | 16 ஆண்டுகளுக்கு முன்பு ரன் அவுட் மூலம் கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய வீரர்!
இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா (Rohit Sharma), தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி ஆகியோரும் ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் சிறப்பாக செயல்பட்டவர்கள் என்ற ICC Men's Team of the Decade பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
தோனி (MS Dhoni) பங்களாதேஷுக்கு (Bangladesh) எதிரான தனது முதல் ஒருநாள் போட்டியில் விசேஷமாக எதுவும் செய்யத் தவறிவிட்டார், கணக்குத் திறக்காமல் ரன் அவுட் ஆனார், ஆனால் அடுத்த தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், விசாகப்பட்டினத்தில் 123 பந்துகளில் 148 ரன்கள் எடுத்தார்.
மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) 2008 ஆம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தோனியின் கேப்டன் தலைமையில் டீம் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்தது.
Also Read | paternity leave நிராகரிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் பற்றித் தெரியுமா?
உலக கிரிக்கெட்டில் மூன்று பெரிய ஐ.சி.சி (ICC) கோப்பைகளை கைப்பற்றிய ஒரே கேப்டன் மகேந்திர சிங் தோனி. தோனியின் தலைமையின் கீழ், இந்தியா ஐசிசி உலக டி 20 (2007), கிரிக்கெட் உலகக் கோப்பை (2011) மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (2013) ஆகியவற்றை வென்றுள்ளது. இது தவிர, 2009 ல் முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் இந்தியா முதலிடத்தைப் பிடித்தது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவி றக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR