MS Dhoni Tractor Video: சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி ஐபிஎல் தொடரில் இருந்த வரும் 2023 ஓய்வுபெற வாய்ப்புள்ளது. சிஎஸ்கே அணிக்கு இதுவரை நான்கு முறை கோப்பையை வென்ற கொடுத்துள்ள தோனி, 5ஆவது கோப்பையை வென்று, பிரியாவிடை பெற வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
2020இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றதில் இருந்து, தோனி தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழித்து வருகிறார். மேலும் அவர் சமீபத்தில் மீண்டும் ஐபிஎல் தொடருக்கான பயிற்சிக்காக களத்தில் இறங்கினார். கடந்த சீசனில் ரவீந்திர ஜடேஜாவிடம் இருந்து கேப்டன் பொறுப்பை திரும்பப் பெற்ற பிறகு, இந்தாண்டும் சென்னை சூப்பர் கிங்ஸை தோனி வழிநடத்த உள்ளார். கடந்தாண்டு தொடரில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்த பிறகு ஏமாற்றமளிக்கும் சீசனில் இருந்து சிஎஸ்கே எப்படி மீண்டு வரும் என்பதைப் பார்க்க ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
மேலும் படிக்க | விபத்திற்கு பிறகு ரிஷப் பந்த் பகிர்ந்த முதல் புகைப்படம்! இணையத்தில் வைரல்!
கைல் ஜேமிசன், யு-19 நட்சத்திரம் ஷேக் ரஷீத் மற்றும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை வரவிருக்கும் ஐபிஎல் சீசனுக்காக சென்னை அணி களமிறங்கியுள்ளது. அணியில் உள்ள இரண்டு தொடர் வெற்றியாளர்களான எம்.எஸ். தோனி மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருடன் அணி எவ்வாறு செயல்படும் என்பதைப் பார்க்க சிஎஸ்கே ரசிகர் பட்டாளம் உற்சாகமாக உள்ளது.
இந்நிலையில், தோனி தனது 2 வருடங்களுக்கு பின் இன்ஸ்டாகிராமில் புதிய பதிவு இட்டுள்ளார். அவர் வயல் வெளிகளில் டிராக்டரை ஓட்டும் வீடியோவை நேற்று (பிப். 8) பகிர்ந்துள்ளார். பைக், கார்களின் பிரியரான தோனி தற்போது புதிதாக டிராக்டரை ஓட்டி பழகியுள்ளார். வயல்களில் சரியான பயன்பாட்டிற்காக டிராக்டரை ஓட்ட கற்றுக்கொள்வது நேரத்தை எடுத்துக்கொள்ளும் செயல்முறையாகும்.
"புதியதைக் கற்றுக்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது, ஆனால் வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்தது" என்று தோனி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார். வீடியோவில், தோனிக்கு இரண்டு விவசாயிகள், விவசாய வயல்களை உழ கற்றுக் கொடுப்பதைக் காணலாம். அவர் ஓய்வுக்கு பிறகு விவசாயத்தை கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | IND vs AUS: முதல் டெஸ்டில் விளையாடப்போவது யார் யார்? நாக்பூர் யாருக்கு சாதகம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ