இந்தியாவின் வெற்றி பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்த வங்கதேசம்!

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், முஷ்பிகுர் ரஹீமின் அதிரடி ஆட்டத்தால் வங்கதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Last Updated : Nov 4, 2019, 08:32 AM IST
இந்தியாவின் வெற்றி பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்த வங்கதேசம்! title=

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், முஷ்பிகுர் ரஹீமின் அதிரடி ஆட்டத்தால் வங்கதேசம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, 3 டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் டி20 போட்டி டெல்லி மைதானத்தில் நடைப்பெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் ஷர்மா 9(5) ரன்களுக்கு வெளியேற, மறு முனையில் ஷிகர் தவான் நிதானமாக விளையாடி 41(42) ரன்கள் குவித்தார். இவரைத்தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற, இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் குவித்தது. 

வங்கதேச அணி தரப்பில் ஷபிபுல் இஸ்லாம், அமினுல் இஸ்லாம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்க தேச அணி களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய லிட்டன் தாஸ் 7(4) ரன்களில் வெளியேற, முஷ்பிகுர் ரஹீம் அதிரடியாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 60(43) ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் 19.3-வது பந்தில் 154 ரன்கள் எட்டிய வங்கதேச அணி, இத்தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளும் பங்கேற்கும் இரண்டாவது டி20 போட்டி வரும் நவம்பர் 7-ஆம் தேதி ராஜ்காட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

குறிப்பு: டி20 போட்டிகளில் 99 போட்டிகள் விளையாடி, அதிகப்படியான டி20 பிரவேசம் மேற்கொண்ட இந்திய வீரர் எனும் பெருமையினை இப்போட்டியில் ரோகித் ஷர்மா பெற்றார். மேலும் டி20 போட்டிகளில் 2452 ரன்கள் குவித்துள்ள ரோகித் ஷர்மா, சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்தவர் எனும் பெருமை பெற்றார். 

Trending News