பாகிஸ்தான்: கார்கில் போர் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2004 ஆம் ஆண்டில் இந்தியா ஒரு முழு தொடருக்குக்காக பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, வீரேந்தர் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் சிறப்பாக விளையாடி 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை வெற்றி பெறக் காரணமாக இருந்தனர்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா மீண்டும் மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்காக பாகிஸ்தான் சென்றது. அதில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் இந்தியாவின் பேட்டிங் வரிசையின் மையமாக இருந்தனர். லாகூரில் நடந்த முதல் டெஸ்டில், தொடக்க ஆட்டக் காரராக களம் இறங்கிய டிராவிட் மற்றும் சேவாக் இருவரும் 410 ரன்கள் என்ற ஒரு பிரமாண்ட ஸ்கோரை குறுகிய நேரத்திலேயே எடுத்து சாதனை படைத்தனர்.
மேலும் ஒரு போட்டியில் 12 பேட்ஸ்மேன் ஆறு பேரின் பந்து வீச்சை எதிர்கொண்டனர். அதில் நான்கு பாகிஸ்தானிய வீரர்களும், இரண்டு இந்திய வீரர்களும் சதம் அடித்தனர். மேலும் சேவாக் 247 பந்துகளில் 254 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். இது அவரது இரண்டாவது இரட்டை சதமாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு முல்தானில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய போது 309 ரன்கள் எடுத்து முந்தைய சாதனையை முறியடித்தார்.
பிற செய்தியும் படிக்கவும்: BCCI தலைவர் சவுரவ் கங்குலி; ICC-ன் புதிய தலைவராக வாய்ப்பு...
லாகூரில் நடந்த அந்த போட்டியை நினைவு கூர்ந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, அந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 81 பந்துகளில் 102 ரன் எடுத்தார். அந்த லாகூர் டெஸ்ட் போட்டியின் போது, அவர் பந்து வீச்சாளர்களின் வலியைக் குறைக்க, அவ்வப்போது ஆட்டத்தின் நடுவில் நகைச்சுவைகளை பகிர்ந்துக்கொண்டோம் என்று கூறியிருக்கிறார்.
Great memories, this was I believe after one of my favourite Test inns in Lahore against India in 2006, Shoaib was always a threat for batsmen but this was a very flat wicket and bowlers were left to share jokes to overcome their pain https://t.co/9kTCuH4pYU
— Shahid Afridi (@SAfridiOfficial) May 29, 2020
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ட்வீட்டுக்கு அஃப்ரிடி பதிலளித்திருந்தார், அதில் அவர்கள் புகைப்படத்தை ஷோயப் அக்தருடன் பகிர்ந்து கொண்டனர்.
மறக்க முடியாத நினைவுகள், 2006-ல் இந்தியாவுக்கு எதிராக லாகூரில் எனக்கு பிடித்த டெஸ்ட் இன்னிங்ஸ். அதில் ஷோயிப் பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்டார். ஆனால் நீண்ட நேரம் விக்கெட் கைப்பற்ற முடியாததால், பந்து வீச்சாளர்கள் தங்கள் வலியை மறக்க நகைச்சுவைகளைப் பகிர்ந்து கொண்டனர்" என்று ட்வீட் செய்துள்ளார் அஃப்ரிடி.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 679 ரன் எடுத்தது. யூனிஸ் கான் (199), முகமது யூசுப் (173), கம்ரான் அக்மல் (103), ஷாஹித் அப்ரிடி (102) என்ற கணக்கில் ரன்கள் எடுத்திருந்தனர்.
பிற செய்தியும் படிக்கவும்: 35 வருட பழைய ஷூ 4.25 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆச்சரியம்!!
இதற்கு பதிலடி தரும் வகையில் ஆடிய இந்திய அணியில், சேவாக் (254), டிராவிட் (128*) ஆகியோரின் உதவியுடன் ஒரு விக்கெட் இழப்பிற்கு 410 ரன்கள் எடுத்தது. ஆனால் மழையினால் ஆட்டம் தடைபட்டதால் அந்த ஆட்டம் வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்தது.
எவ்வாறாயினும், கராச்சியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை வென்றது.
(மொழியாக்கம் - சரிதா சேகர்)