சமீபத்தில் செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகள் தொடங்கின. அப்போட்டியில் உலகின் சிறந்த 16 செஸ் வீரர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் வீரர் பிரக்ஞானந்தாவும் பங்கேற்றார்.
அவர் மிகச்சிறப்பாக விளையாடி, கால் இறுதி சுற்றில் 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் வெய் யியை வீழ்த்தினார். அடுத்ததாக அரையிறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை டை பிரேக்கர் சுற்றில் 1.5 - 0.5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்.
பின்னர் இறுதி போட்டியில் சீன வீரர் டிங் லிரனை எதிர்கொண்டார் பிரக்ஞானந்தா. இந்த பரப்பரப்பான இறுதிச்சுற்றின் முதல் செட்டை சீன வீரர் திங் லிரன் தன் வசமாக்கினார். ஆனால் 2வது செட்டுக்கான போட்டியில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். இதனால், 1-1 என்ற செட் கணக்கில் போட்டி டை ஆனது.
இதை தொடர்ந்து நடத்தப்பட்ட டை பிரேக்கர் சுற்றில் சீன வீரர் திங் லிரனிடம் பிரக்ஞானந்தா நூல் இழையில் தோல்வி அடைந்தார். இருப்பினும், இறுதி சற்றுக்கு பிரக்ஞானந்தா தகுதி பெற்றதனால் செஸ்ஸபிள் மாஸ்டர் ஆன்லைன் செஸ் போட்டிகளில் அவர் இரண்டாம் இடத்தை தக்கவைத்துக்கொண்டார்.
மேலும் படிக்க | பயங்கர சண்டை... தடுக்க போனது குற்றமா... அடித்து கொல்லப்பட்ட அப்பாவி இளைஞர்!
மேலும், இதன் மூலம் அவர் சாம்பியன்ஸ் செஸ் டூர் போட்டிகளில் முதன்முறையாக பங்கேற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இதற்கிடையில் 16 வயதான அவர் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளையும் எழுதி வருகிறார். பகலில் தேர்வுகளையும், நடு இரவில் செஸ் போட்டிகளையும் எதிர்கொண்டு வந்தார் என்பது சற்று வியப்பில் நம்மை ஆழ்த்துகிறது.
இதையடுத்து சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ந்தேதி தொடங்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் பிரக்ஞானந்தா பங்கேற்கவுள்ளதாக தெரிகிறது. இந்த போட்டியில் 160க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 303 அணிகள் பதிவு செய்துள்ளன.
இந்நிலையில் இதுவரை பிரக்ஞானந்தாவுக்கு ஸ்பான்சர் செய்யும் நிறுவனமாக இருக்கும் இந்தியன் ஆயில் நிறுவனம் தற்போது பிரக்ஞானந்தாவுக்கு பணி நியமன சான்றிதழை வழங்கி அவருக்கு வேலை வாய்ப்பு தந்துள்ளது.
தற்போது 16 வயதாகும் பிரக்ஞானந்தா 18 வயது பூர்த்தியானதும் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிபுரிய தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து பிரக்ஞானந்தா கூறுகையில், தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தனக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் மிகவும் ஆதரவாக செயல்பட்டதாகவும், தன்னைபோல் பல செஸ் வீரர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் ஆதரித்து வருவது பெருமைக்குரிய விஷயம் என்றும் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR