Olympics மற்றும் Wimbledon இல் இருந்து விலகுவதாக ரஃபேல் நடால் அறிவிப்பு: காரணம் இதுதான்

டென்னிஸ் ஆட்டத்தின் மிகச்சிறந்த ஆட்டக்காரரும் 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான ரஃபேல் நடால் வியாழக்கிழமை டோக்கியோ விளையாட்டுகள் மற்றும் விம்பிள்டன் 2021 ஆகியவற்றிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 17, 2021, 08:42 PM IST
  • டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மற்றும் விம்பிள்டன் போட்டிகளிலிருந்து விலகுவதாக ரஃபேல் நடால் அறிவிப்பு.
  • நடால் 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை விம்பிள்டனை வென்றுள்ளார்.
  • 2008 இல் ஆண்கள் ஒற்றையர் டென்னிஸில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளார்.
Olympics மற்றும் Wimbledon இல் இருந்து விலகுவதாக ரஃபேல் நடால் அறிவிப்பு: காரணம் இதுதான் title=

டென்னிஸ் ஆட்டத்தின் மிகச்சிறந்த ஆட்டக்காரரும் 20 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான ரஃபேல் நடால் வியாழக்கிழமை டோக்கியோ விளையாட்டுகள் மற்றும் விம்பிள்டன் 2021 ஆகியவற்றிலிருந்து விலகுவதாக அறிவித்தார். தனது உடல்நலனை பாதுகாக்கவும் தன் விளையாட்டு வாழ்க்கையை நீட்டித்திருக்கச் செய்யவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  நடால் 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை விம்பிள்டனை வென்றுள்ளார். மேலும், 2008 இல் ஆண்கள் ஒற்றையர் டென்னிஸில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் ரோலண்ட் கரோஸில் நோவக் ஜோகோவிச்சிடம் தோல்வியுற்ற ரபேல் நடால் (Rafael Nadal), ரோலண்ட் கரோஸுக்கும் ஜூன் 28 முதல் தொடங்கவுள்ள விம்பிள்டன்னுக்கும் இடையே மிக குறுகிய இடைவெளி இருப்பதாகவும், தனது உடலை தயார்படுத்திக்கொள்ள இது போதுமான இடைவெளி இல்லை என்றும் கூறினார். ஒலிம்பிக் போட்டிகள் எப்போதுமே தனக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என்றும் 3 ஒலிம்பிக்கில் (Olympics) ஸ்பெயினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மரியாதை தனக்கு கிடைத்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் நடால் கூறினார்.

"அனைவருக்கும் வணக்கம், இந்த ஆண்டு விம்பிள்டன் (Wimbledon) சாம்பியன்ஷிப் மற்றும் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். இது மிகவும் கடினமான முடிவாக இருந்தது. ஆனால் என் உடல் கூறுவதை நான் கேட்டேன். எனது அணியுடன் கலந்துரையாடிய பிறகு அது சரியான முடிவு என்பதை நான் புரிந்துகொள்கிறேன்" என்று நடால் கூறினார்.

ALSO READ: கொரோனாவால் ஜப்பானில் அவசர நிலை நீட்டிப்பு; ஒலிப்பிக் போட்டிகளின் நிலை என்ன

"எனது தொழில் வாழ்க்கையை நீடிப்பதும், எனக்கு மகிழ்ச்சியைத் தருவதை தொடர்ந்து செய்வதும்தான் எனது குறிக்கோள். அதாவது மிக உயர்ந்த மட்டத்தில் போட்டியிடுவதும், அந்த தொழில்முறை மற்றும் தனிப்பட்ட இலக்குகளுக்காக அதிகபட்ச போட்டிகளில் தொடர்ந்து போராடுவதும் எனது குறிக்கோளாக இருக்கும்" என்று அவர் மேலும் தெரிவித்தார். 

ஆர்.ஜி போட்டிகள் மற்றும் விம்பிள்டனுக்கு இடையில் 2 வாரங்கள் மட்டுமே இருந்தன. இவ்வளவு குறுகிய இடைவெளிகளைக் கொண்டுள்ள போட்டிகளுக்கு தனது உடல் இடமளிக்கவில்லை என நடால் தெரிவித்தார். இரண்டு மாதங்கள் கடுமையான பயிற்சியும் முயற்சியும் இருந்தது. நான் எடுத்துள்ள முடிவு எனது நடுத்தர மற்றும் நீண்ட கால விளையாட்டு வாழ்க்கையை மனதில் வைத்து எடுக்கப்பட்டது" என்று நடால் கூறினார்.

"தொடர்ந்து மிகச்சிறந்த போட்டிகளில் அதிக அளவிலான உற்சாகத்துடன் விளையாட, எனது உடலில் எந்தவிதமான அதிகப்படியான அழுத்தத்தையும் போடாமல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும்" என்று அவர் மேலும் தெரிவித்தார். 

"உலகெங்கிலும் உள்ள எனது ரசிகர்களுக்கு, குறிப்பாக இங்கிலாந்து மற்றும் ஜப்பானில் உள்ள ரசிகர்களுக்கு இந்த சிறப்பு செய்தியை அனுப்ப விரும்புகிறேன்," என்று அவர் கூறியுள்ளார்.

ALSO READ:Coca-Cola: பத்திரிகையாளர் சந்திப்பில் ரொனால்டோவின் கையசைவால் கவிழ்ந்த நிறுவனம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News