’ரோகித் வராமலேயே இருந்திருக்கலாம்’ ராகுல் மைண்ட் வாய்ஸை சொன்ன நாதன் லையன்..!

Ind vs Aus 4th Test : இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆஸ்திரேலியா வராமலேயே இருந்திருக்கலாம் என கேஎல் ராகுல் நினைத்ததை ஆஸ்திரேலிய வீரர் லாதன் லையன் மைதானத்திலேயே கேட்டுவிட்டார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 27, 2024, 01:24 PM IST
  • ரோகித் சர்மா மீண்டும் மோசமான பேட்டிங்
  • கேல்எல் ராகுலிடம் கேள்வி எழுப்பிய நாதன் லையன்
  • கேப்டன் பொறுப்பு ரோகித்திடம் இருந்து பறிப்பு?
’ரோகித் வராமலேயே இருந்திருக்கலாம்’ ராகுல் மைண்ட் வாய்ஸை சொன்ன நாதன் லையன்..! title=

பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டியில் நான்காவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க, இந்திய 2ம் நாள் ஆட்டநேர முடிவில் 5விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா வழக்கம் போல கடமைக்கு வந்து ஆடி ஆவுட்டாகி சென்றுவிட்டார். 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். ரோகித் சர்மா கடந்த 12 இன்னிங்ஸ்களில் வெறும் 155 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். இத்தனைக்கும் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும் கேஎல் ராகுல் பேட்டிங் ஆர்டரை தான் விளையாட வேண்டும் என்பதற்காக இஷ்டத்துக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார். இதனால் இந்திய அணியின் ஒட்டுமொத்த ஆட்டமும் மோசமாகி தோல்வியை நோக்கி பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 

ரோகித் சர்மா மோசமான ஆட்டம்

கேப்டன் ரோகித் சர்மா இப்போது சுத்தமாக பார்மில் இல்லை. அவர் விளையாடாத பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது. ஆனால் அவர் கேப்டன் பதவியேற்ற அடிலெய்டு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் படுதோல்வியை சந்தித்தது. பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மழை காரணமாக தோல்வியில் இருந்து இந்திய அணி தப்பியது. இப்போது மெல்பேர்ன் மைதானத்தில் நடக்கும் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் படுமோசமாக ஆடிக் கொண்டிருக்கிறது இந்திய அணி. அதற்கு பிள்ளையார் சுழி போட்டிருப்பது கேப்டன் ரோகித் சர்மா தான்.

கேஎல் ராகுல் அதிருப்தி

ஏதாவது ஒரு சில இன்னிங்ஸ் மோசமாக ஆடினால் பரவாயில்லை, கடந்த 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களிலும் ஒரே ஒரு அரைசதம் தவிர்த்து மிக மோசமாக இரட்டை இலக்கம் மற்றும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி வெளியேறிக் கொண்டிருக்கிறார். கேப்டன்சியும் ஒழுங்காக செய்வதில்லை. ஆனால், அவருக்கு மட்டும் இந்திய அணியில் இடம் உறுதியாக உள்ளது. மறுபுறம் சிறப்பாக விளையாடும் கேஎல் ராகுல் பேட்டிங் ஆர்டரை இஷ்டத்துக்கு மாற்றுகிறார், இல்லையென்றால் அணியில் பிளேயிங் லெவனில் சேர்க்காமல் விட்டுவிடுகிறார். நன்றாக விளையாடக்கூடிய சுப்மன் கில் வெளியே உட்கார வைக்கப்பட்டிருக்கிறார். ரோகித் சர்மா மட்டும் தொடர்ந்து மோசமாக ஆடினாலும் இந்திய அணியின் கேப்டன் என்ற முறையில் அணியில் தக்க வைக்கப்படுகிறார். இதனால் கேஎல் ராகுல் ஏற்கனவே அதிருப்தியில் தான் இருக்கிறார்.

மேலும் படிக்க | அஸ்வின் இதுவரை இந்த அணிக்கு எதிராக ஒரு போட்டியில் கூட விளையாடியது இல்லை!

ராகுல் மைண்ட் வாய்ஸ்

இருப்பினும் இதனை எல்லாம் வெளியில் சொல்ல முடியாமல் மவுனம் காத்துக் கொண்டிருக்கிறார். இப்படியான சூழலில் தான் மெல்போர்ன் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லையன், ராகுலின் மைண்ட் வாய்ஸை அப்படியே அவரிடம் கேட்டுவிட்டார். ’ராகுல் நீங்கள் நன்றாக தானே ஆடிக் கொண்டிருக்கிறீர்கள், அப்புறம் ஏன் உங்களின் பேட்டிங் ஆர்டர் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது’ என கேட்க, கேஎல் ராகுல் எந்த பதிலும் சொல்லவில்லை. உண்மையில் அந்த இடத்தில் கேப்டன் ரோகித் சர்மா தான் என்னுடைய பேட்டிங் ஆர்டர் மாற்றத்துக்கு காரணம் என அவர் மைண்டில் நினைத்திருக்கக்கூடும். ஆனால் அதனை வெளிப்படையாக கேஎல் ராகுல் சொல்லவில்லை.

எம்எஸ்கே பிரசாத் விமர்சனம்

இந்த சூழலில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத். இந்திய அணியின் சுமையாக இப்போது கேப்டன் ரோகித் சர்மா இருப்பதாகவும், அவர் இல்லாத இந்திய அணி நிச்சயம் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும், நல்ல பிளேயர்கள் வெளியே உட்கார்ந்து கொண்டிருக்கும்போது அவர் ஏன் அணியில் நீடிக்கிறார் என தெரியவில்லை என கூறியுள்ளார். ரோகித் சர்மா இல்லாத இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதை சுட்டிக் காட்டியிருக்கும் எம்எஸ்கே பிரசாத், ரோகித் இல்லாமல் இருந்தால் அடுத்த போட்டியிலாவது இந்திய அணி சிறப்பாக ஆடி வெற்றி பெறும் என கூறியுள்ளார். 

ரோகித் சர்மா ஏன் முதல் டெஸ்டில் ஆடவில்லை

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பார்டர் கவாஸ்கர் டிராபி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. பெர்த் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் சொந்த காரணங்களுக்காக அவர் பங்கேற்கவில்லை. கேப்டன் பொறுப்பை ஜஸ்பிரித் பும்ரா ஏற்று இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார். இதனால் இந்தியஅணி வெற்றி வாகை சூடியது. ஆனால், ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்றதும் இந்திய அணி மீண்டும் தோல்வி பாதைக்கு திரும்பியுள்ளது. இதனை பிசிசிஐ உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. 

மேலும் படிக்க | சிஎஸ்கே அணியில் உள்ள 3 முக்கிய பிரச்சனைகள்! என்ன செய்ய போகிறார் தோனி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News