Brain Health: மூளையின் ஆற்றலை அதிகரிக்க உதவும்.... சில ஆரோக்கியமான பழக்கங்கள்

நம் உடலின் இயக்கம் அனைத்தையும் கட்டுப்படுத்தும் மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  மூளை கூர்மையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், நாம் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 26, 2024, 05:30 PM IST
  • மூளையை கூர்மைப்படுத்த, நினைவாற்றலை அதிகரிக்க கடைபிடிக்க வேண்டியவை.
  • புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருக்க வேண்டும்.
  • யோகா அல்லது தியான பயிற்சி செய்வதன் மூலம், மூளையின் ஆற்றல் அதிகரிப்பதோடு, மன அழுத்தம் நீங்கும்.
Brain Health: மூளையின் ஆற்றலை அதிகரிக்க உதவும்.... சில ஆரோக்கியமான பழக்கங்கள் title=

நம் உடலின் இயக்கம் அனைத்தையும் கட்டுப்படுத்தும் மூளை ஆரோக்கியமாக இருந்தால் தான் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  மூளை கூர்மையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும், நாம் சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டும். அந்த வகையில், மூளையின் ஆற்றலை அதிகரிக்கன் உதவும் சில பழக்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். 

நமது புத்தி கூர்மையாக இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்களை பார்க்க முடியுமா என்ன... வயது ஏற ஏற, மூளையில் செயல்திறன் சிறிது குறையலாம். எனினும், சில பழக்கத்தை கடைபிடிப்பதால், மூளை ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருக்கும். ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மூளையை கூர்மைப்படுத்த எந்த வயதிலும் பின்பற்றக் கூடிய சில விஷயங்கள் பற்றிய குறிப்புகளை வழங்கியுள்ளது. இதனை  உங்கள் நினைவாற்றல் மற்றும் மூளை திறனை எளிதாக அதிகரிக்கலாம்.

மூளையை கூர்மைப்படுத்த, நினைவாற்றலை அதிகரிக்க நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை

புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளுதல்

உங்கள் மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமெனில், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருக்க வேண்டும். எந்த வயதினராக இருந்தாலும், புதிய விஷயங்களைக் கற்கத் தயங்காதீர்கள். இந்த தொழில்நுட்ப யுகத்தில், புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதை விட சிறந்தது எதுவுமில்லை. நீங்கள் மிகவும் விரும்பும் கலை அல்லது ஏதேனும் புதிய மொழி ஆகியவற்றை கற்றுக்கொள்ளலாம். இதனால் நினைவாற்றல் அதிகரித்து மூளை சுறுசுறுப்பாக இயங்குகிறது.

மூளைக்கான பயிற்சிகள் 

நினைவாற்றல் சிறப்பாக இருக்க, மூளைக்கு அதிக வேலை கொடுக்கும் செஸ், சுடோகு போன்ற விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றை தினமும் சிறிது நேரம் விளையாடுவது அவசியம். அதே போன்று அதிகாலையில் யோகா அல்லது தியான பயிற்சி செய்வதன் மூலம், மூளையின் ஆற்றல் அதிகரிப்பதோடு,  மன அழுத்தம் அனைத்தும் நீங்கும்.

எழுதும் பழக்கத்தை கடைபிடித்தல்

உங்களுக்கு பிடித்த ஏதேனும் விஷயத்தைப் பற்றி எழுதுதல் அல்லது நாட்குறிப்பை எழுதுதல் உங்கள் மூளை ஆற்றலுடன் செயல்பட உதவும். தினசரி திட்டமிடல் அல்லது டைரி எழுதுவதை வழக்கமாக்கிக் கொளவதால், உங்கள் மூளை சிறப்பாக செயல்படும். அதனால் தினமும் ஏதாவது எழுதுங்கள். செலவுக் கணக்காக இருந்தாலும் சரி, எதிர்காலத் திட்டமிடலாக இருந்தாலும் சரி, எதையாவது  ஒன்றை எழுதுவதும் படிப்பதும் மூளை ஆக்டிவ் ஆக இருக்க மிகவும் அவசியம்.

மேலும் படிக்க | பெண்ணின் கண்ணில் இருந்த 27 கான்டாக்ட் லென்ஸ்கள்... அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்

நறுமணம்

நறுமணம் நம் வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது மூளையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, அதன் செயல்திறனை அதிகரிக்கிறது. இதற்கு, நீங்கள் விரும்பும் எந்த வகையான நறுமணத்தை பயன்படுத்துங்கள். அது பூவாக இருக்கலாம். வாசனை திரவியமாக இருக்கலாம். இயற்கையான வாசனை பொருட்களை பயன்படுத்துவது அல்லது அவற்றின் நறுமணத்தை சுவாசிப்பது மிகவும் நன்மை பயக்கும். மனஅழுத்தத்தை போக்கும்

ஆக்கப்பூர்வமாக செயல்படுதல்

நீங்கள் ஆக்கப்பூர்வமாக இருந்தால் அல்லது புதிதாக ஏதாவது முயற்சி செய்தால், அது மூளைக்கு மிகவும் சிறந்த பயிற்சியாக என்று கருதப்படுகிறது. இது மூளையையும் நினைவாற்றலையும் கூர்மையாக வைத்திருக்கும். மேலும் நேர்மறையாகச் சிந்திப்பது மனதை அமைதிப்படுத்துகிறது. எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இதனால் நினைவாற்றலை மேம்படுகிறது.

ஞாபகப்படுத்தி பார்க்கும் பழக்கம்

அடிக்கடி எதையும்  மறந்து விடும் பழக்கம் இருந்தால், நினைவில் வைத்துக் கொள்ள அந்த விஷயத்தைப் பற்றி திரும்பத் திரும்பச் சொல்லுங்கள். உதாரணமாக, நீங்கள் எதையாவது எங்காவது வைத்திருக்க மறந்துவிட்டால், அடுத்த முறை அதை மறக்காமல் இருக்க, ஒரு நாளைக்கு ஒரு முறை அதைப் பற்றி ஞாபகப்படுத்திப் பார்க்கவும், அதாவது, அது எங்கே வைத்துள்ளீர்கள் என்பதை நினைவில் கொண்டு வரவும். 

(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புற்றுநோயாளிகளுக்கு நிம்மதி அளிக்கும் செய்தி... 99% குணப்படுத்தும் அற்புத சிகிச்சை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News