புதுடெல்லி: கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த 2 அணிகளுக்கிடையேயான போட்டி ரசிகர்களால் ஒரு போராகவே பார்க்கப்படுகின்றது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான போட்டிகளுக்கு மத்தியில் பல சுவாரசியமான நிகழ்வுகள் பற்றிய செய்திகளும் அவ்வப்போது வெளிவருவதுண்டு.
இரவு உணவில் ஷோயிப் அக்தருடன் சந்திப்பு
இதுபோன்ற மறக்க முடியாத ஒரு சம்பவம் இந்திய வீரர் ராபின் ஊத்தப்பாவுடன் (Robin Uthappa) நடந்தது. பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் 2007 ல் அதி பயங்கரமான ஒரு பீமரை வீசி அவரை கதி கலங்க வைத்துள்ளார். நவம்பர் 2007 இல் குவாலியரில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக ஷோயிப் அவரை இரவு உணவின் போது சந்தித்ததாக ஊத்தப்பா கூறினார்.
சோயிப் உத்தப்பாவை மிரட்டினார்
ராபின் உத்தப்பா 'வேக்-அப் வித் சோஹ்ராப்' என்ற யூடியூப் சேனலிடம், " நாங்கள் ஒன்றாக டின்னர் செய்தோம் என்பது எனக்கு நினைவில் உள்ளது. ஷோய்ப் (Shoaib Akhtar) பாயும் அங்கு இருந்தார். அவர் என்னிடம் வந்து 'ராபின் குவஹாத்தியின் முதல் ஒருநாள் போட்டியில் நன்றாக ஆடினீர்கள், குட் கேம். நீங்கள் முன்னால் வந்து என் பந்தை அடித்தீர்கள். மீண்டும் இப்படி செய்தால், அதற்குப் பிறகு என்ன நடக்கும் என எனக்குத் தெரியாது. உங்கள் தலையில் நேராக ஒரு பீமர் வீசப்படும்' என்று கூறினார்" என்று தெரிவித்தார். அதன் பிறகு அப்படி விளையாட தனக்கும் தைரியம் வரவில்லை என ஊத்தப்பா தெரிவித்துள்ளார்.
ALSO READ: ICC Test: தரவரிசையில் இந்தியா முதலிடம், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குதூகலம்
ஊத்தப்பா இர்பானுடன் கிரீசில் இருந்தார்
அக்தருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை நினைவு கூர்ந்த ஊத்தப்பா, "நாங்கள் குவஹாத்தியில் விளையாடிக் கொண்டிருந்தோம். அது இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள இடம் என்பதால், அங்கு சீக்கிரமே இருட்டி விடும். அந்த நேரத்தில், 2 புதிய பந்துகள் ஒருநாள் போட்டிகளில் பயன்படுத்தப்பட்டதில்லை. 34 ஓவர்களுக்குப் பிறகு, 24 ஓவர்கள் வீசப்பட்ட பந்தைப் பயன்படுத்தினோம்." என்றார். இந்த போட்டியில் இந்தியா வெற்றியின் அருகில் இருந்தது. அப்போதுதான் உத்தப்பாவும் இர்பான் பதானும் கிரீஸில் இருந்தார்கள்.
ஷோய்ப் யார்க்கர் பந்தை வீசினார்
ராபின் ஊத்தப்பா மேலும் கூறுகையில், "ஷோயிப் பந்துவீசிக் கொண்டிருந்தார். இர்பானும் நானும் பேட்டிங் செய்து கொண்டிருந்தோம். வெற்றிபெற 25 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க வேண்டி இருந்தது. அவர் என்னை நோக்கி யார்கரை வீசினார். நான் அதை மிஸ் செய்தேன். பந்து மிக வேகமாக ஆபத்தான முறையில் வந்ததை என்னால் பார்க்க முடிந்தது" என்றார்.
ஷோய்பின் பந்தை அடித்தார் ஊத்தப்பா
உத்தப்பா மேலும் கூறுகையில், "நான் பந்தை நிறுத்தினேன். அது மணிக்கு 154 கி.மீ. வேகத்தில் வந்தது. அடுத்த பந்து ஃபுல் டாஸாக இருந்தது. அதை நான் அடித்ததில் அது பவுண்டரிக்கு போய் 4 ரன்கள் கிடைத்தது. அதன் பிறகு எங்களுக்கு 3 அல்லது 4 ரன்கள் தேவைப்பட்டது. அக்தர் பந்தில் முன்னால் சென்று அடிக்க வேண்டும் என நான் எனிடமே கூறிக்கொண்டேன். இப்படிப்பட்ட வாய்ப்பு அடிக்கடி கிடைப்பதில்லை. அவர் ஒரு லெங்த் பந்தை போட்டார். நான் நினைத்தபடியே செய்தேன். பந்து பவுண்டரிக்கு சென்று 4 ரன்கள் கிடைத்தது. நாங்கள் போட்டியில் வென்றோம். இந்த ஒருநாள் தொடரை இந்தியா (Team India) 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது." என்றார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR