IPL தொடர்களில் 5000 ரன்கள் குவித்து முதல் வீரர் என்னும் பெருமையினை பெற்றார் சுரேஷ் ரெய்னா!
IPL தொடரின் 12-வது சீசன் இன்று துவங்கி நடைப்பெற்று வருகிறது. IPL 2019 தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனை அடுத்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாடி 19(21) ரன்கள் குவித்தார். இதன் மூலம் IPL தொடரில் 5000 ரன்கள் குவித்த முதல் வீரர் என்னும் பெருமையை பெற்றுள்ளார்.
இவரைத் தொடர்ந்து இப்பட்டியலில் விராட் கோலி 4948(163 போட்டிகள்) ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், ரோகித் ஷர்மா 4493(173 போட்டிகள்), கௌதம் கம்பீர் 4217(154 போட்டிகள்), ராபின் உத்தப்பா 4086(165 போட்டிகள்) என அடுத்தடுத்து காத்திருக்கின்றனர்.
இன்றைய போட்டியில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் (கோலி - ரெய்னா) வீரர்கள் 5000 ரன்களுக்கு மிக அருகாமையில் இருந்த நிலையில் இருவரில் யார் முதலில் 5000 ரன்கள் குவிப்பர் என கேள்விகள் எழுந்து வந்தது. இந்நிலையில் இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக ரெய்னா IPL தொடரில் புதியதொரு மைல் கல்லை எட்டி சாதனை படைத்துள்ளார்.
இந்த பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தலைவர் டோனி 4016(175 போட்டிகள்) ரன்களுடன் 7-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.