ஆசிய விளையாட்டு போட்டிகள் தடகளப் பிரிவில் இந்தியாவிற்கு இரண்டு வெள்ளி கிடைத்துள்ளது!
18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் சுமார் 45 நாடுகள் பங்கேற்றுள்ளது.
18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 8-ஆம் நாளான இன்று தடகளப் பிரிவு போட்டிகள் இன்று நடைப்பெற்றது. இப்போட்டியில் இந்தியா இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது.
இப்பதக்கங்களை, மகளிர் பிரிவின் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹிமாதாஸ் மற்றும் ஆடவர் பிரிவின் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முகமது அனாஸ் யசியா ஆகியோர் பெற்றுத் தந்துள்ளனர்.
இதனையடுத்து நடைப்பெற்ற 10000m ஆடவர் ஓட்டப்பந்தயம் பிரிவில் தமிழகத்தின் G லட்க்ஷ்மனன் வெண்கலம் வென்றுள்ளார்.
#AsianGames2018: India's G Lakshmanan gets bronze in men's 10,000 m finals pic.twitter.com/Mwerfc1YuO
— ANI (@ANI) August 26, 2018
இந்த பதக்கங்கள் மூலம் இந்தியா 7 தங்கம், 9 வெள்ளி மற்றும் 20 வெண்கலங்களுடன் 33 பதக்கங்கள் பெற்று பதக்கப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. 75 தங்கம் உள்பட 169 பதக்கங்களுடன் சீனா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது!