சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை 2022 போட்டியில் இந்திய அணி பைனலுக்கு செல்லாமல் வெளியேறியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணி என்று இருந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. இருப்பினும் இந்த தொடரின் மூலம் சில வீரர்கள் தங்கள் பெயரை அணியில் நிலைநாட்டி உள்ளனர். உலக கோப்பை போட்டிகள் அக்டோபர் 16ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் விளையாட உள்ளது. உலக கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்ட நிலையில், மற்ற தொடர்களுக்கான அணி விவரமும் வெளியாகி உள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் இந்த மாத இறுதியில் டி20 தொடராக நடைபெற உள்ளது. இதில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோத உள்ளது. முதலில் டி20 தொடர் நடைபெறவுள்ளது, இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டி20 தொடர் செப்டம்பர் 28 அன்று திருவனந்தபுரத்தில் நடைபெறும். 2வது மற்றும் 3வது டி20 போட்டிகள் அக்டோபர் 2 மற்றும் 4ம் தேதி கவுகாத்தி மற்றும் இந்தூரில் நடக்கிறது. இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் இந்தியா ஆட உள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா தொடர் செப்டம்பர் 20 அன்று தொடங்க உள்ளது. 2வது மற்றும் 3வது டி20 முறையே செப்டம்பர் 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
One title
One goal
Our squad #TeamIndia | #T20WorldCup pic.twitter.com/Dw9fWinHYQ— BCCI (@BCCI) September 12, 2022
மேலும் படிக்க | இலங்கை வெற்றிக்கு தோனி தான் காரணமா? - உண்மையை கூறிய கேப்டன் தசுன் ஷனகா!
ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.
காத்திருப்பு வீரர்கள் - முகமது. ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.
ஆஸ்திரேலியா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
தென்னாப்பிரிக்கா டி20 போட்டிகளுக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஆர். அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகமது. ஷமி, ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா.
குறிப்பு: ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சொந்தத் தொடரின் போது உடற்தகுதி தொடர்பான வேலைகளுக்காக NCA க்கு அறிக்கை செய்வார்கள்.
மேலும் படிக்க | உலகக்கோப்பைக்கான இந்திய அணி ரெடி: ட்ரெண்டாகும் ஷமி, சாம்சன் - ரசிகர்கள் கொந்தளிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ