மில்லர் ஆறுதல் சதம்... ஆஸ்திரேலியாவை அடக்குமா தென்னாப்பிரிக்கா - பைனலுக்கான கடைசி யுத்தம்!

SA vs AUS  Match Update: நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 212 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 16, 2023, 07:17 PM IST
  • டேவிட் மில்லர் 101 ரன்களை குவித்தார்.
  • டாப் ஆர்டர் பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
  • கம்மின்ஸ், ஸ்டார்க் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மில்லர் ஆறுதல் சதம்... ஆஸ்திரேலியாவை அடக்குமா தென்னாப்பிரிக்கா - பைனலுக்கான கடைசி யுத்தம்! title=

SA vs AUS  Match Update: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் (ICC World Cup 2023) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன. இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்ட நிலையில், இன்றைய போட்டியை வெல்லப்போவது யார் என்ற ஆர்வம் அனைவரிடத்திலும் உள்ளது. 

குறுக்கிட்ட மழை

அந்த வகையில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த தென்னாப்பிரிக்கா அணிக்கு தொடக்கமே மிக மோசமானதாக அமைந்தது. அடுத்தடுத்து டாப் ஆர்டர் பேட்டர்கள் அவுட்டாக 14 ஓவர்கள் 4 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்களை மட்டுமே இந்தியா எடுத்திருந்தது. பின்னர், மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டு சற்று நேரத்திலேயே மீண்டும் தொடங்கப்பட்டது. 

மேலும் படிக்க | டாஸில் கோல்மால் செய்கிறாரா ரோஹித்...? முன்னாள் பாக். வீரர் சொல்லும் காரணத்தை பாருங்க!

கிளாசென் - மில்லர் ஜோடி மிக நிதானமாக விளையாடி வந்த நிலையில், 95 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தது. கிளாசென் 47 ரன்களில் ஹெட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த யான்சனும் அவர் பந்திலேயே டக்அவுட்டாக ஆட்டம் மீண்டும் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. 

மில்லர் சதம்

மில்லர் மட்டுமே பவுண்டரிகளை அடித்து வந்த நிலையில், கோட்ஸியும் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தார். இந்த ஜோடி 53 ரன்களை அமைத்தது. இந்நிலையில், கோட்ஸி 19 ரன்களில் ஆட்டமிழக்க அந்த பார்ட்னர்ஷிப்பும் உடைந்தது. மில்லர் சதம் அடித்த உடனேயே ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவர் 101 ரன்களுக்கு ஆட்டமிழக்க கடைசி கட்டத்தில் ரபாடா மட்டுமே சற்று சமாளிக்க 49.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹசில்வுட்,  ஹெட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அரையிறுதி என்றாலே தென்னாப்பிரிக்கா அணி சொதப்பும் என்பது இன்று மீண்டும் நிரூபனமாகி உள்ளது. உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கே சென்றிராத நிலையில், இம்முறை பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் நிச்சயம் வெற்றி பெறும் என நம்பப்பட்டது. தற்போது வரும் நவ. 19ஆம் தேதி இந்தியா உடன் ஆஸ்திரேலியா மோதவே அதிக வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | இந்தியாவை காத்தார் ஷமி... பைனலுக்கு சென்றது ரோஹித் & கோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News