இந்தியன் பிரீமியர் லீக் 2022 மெகா ஏலத்திற்கு (IPL mega auction) முன்னதாக ரூ. 2 கோடி ரூபாய் என்ற அதிகபட்ச அடிப்படை விலையைத் தேர்ந்தெடுத்த சில முன்னணி வீரர்களைப் பற்றிய விரிவானத் தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம்.
ககிசோ ரபாடா (Kagiso Rabada)
தற்போது லீக்கில் உள்ள சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவுக்கு ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் பெரும் தேவை இருக்கும்.
பல ஆண்டுகளாக ஐபிஎல்லில் சிறந்த விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், 50 ஐபிஎல் போட்டிகளில் 76 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer)
ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு அதிக விலை கிடைக்கும். பல உரிமையாளர்கள் கேப்டன் பதவிக்கான சாத்தியமான வீரர்களைத் தேடுகிறார்கள்.
அட்டகாசமான பேட்டரான ஐயர், ஐபிஎல்லில் ஒரு தலைவராகவும் சிறப்பாக செயல்பட்டவர். மேலும் 2020ல் டெல்லி கேபிடல்ஸை லீக் இறுதிப் போட்டிக்கு கொண்டு சென்ர முதல் கேப்டன் என்ற பெருமைப் பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர், மொத்தம் 87 ஐபிஎல் போட்டிகளில் 2375 ரன்கள் எடுத்துள்ளார்.
ALSO READ | IPL Mega Auction 2022: பண மழையில் குளிர்காயும் பாண்டியா-ராகுல்
டேவிட் வார்னர் (David Warner)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னரும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் அணிகளின் விருப்பத் தெரிவாக இருப்பார்.
கேப்டன் பதவிக்கான வீரர்களில் ஒருவரான 35 வயது வார்னர், ஆஸ்திரேலியாவுக்காக அனைத்து வடிவங்களிலும் நிலையான வீரர் என்று பெயர் பெற்றவர். பல ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் தனது சிறந்த தகுதியை நிரூபித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் 150 ஆட்டங்களில் 41.59 என்ற அற்புதமான சராசரியில் 5449 ரன்கள் குவித்த வார்னர், வெளிநாட்டு வீரர்களில் முன்னணியில் உள்ளார்.
ALSO READ | ALSO READ | க்ருணால் பாண்டியா இந்த ஐபிஎல்லின் Sixer King ஆவாரா?
ஆர் அஸ்வின்
இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர் அஸ்வின் சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவராக இருக்கிறார். 2009 ஆம் ஆண்டு முதல் லீக்கின் ஒரு பகுதியாக இருந்த அவருக்குப் ஏராளமான அனுபவங்கள் உள்ளன.
மூத்த இந்திய ஆஃப் ஸ்பின்னரான அஸ்வின், கடந்த காலங்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டவர். சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்டுள்ள அஸ்வின், 167 ஐபிஎல் போட்டிகளில் 145 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஷிகர் தவான்
மற்றொரு மூத்த இந்திய வீரரான ஷிகர் தவான் பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ரன் குவித்து வருகிறார். கடந்த சீசனில் 16 ஆட்டங்களில் 587 ரன்கள் குவித்த ஷிகர் தவான் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
192 ஐபிஎல் போட்டிகளில் 5784 ரன்கள் எடுத்துள்ள தவான், லீக் போட்டிகளில் எப்போதுமே அதிக ரன்களை எடுத்தவர்களில் ஒருவராக உள்ளார்.
ALSO READ | IPL2022: இந்த ஆண்டு ஐ.பி.எலுக்கு 'No' சொன்ன ஸ்டார் பிளேயர்ஸ்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR