பெனோனி (தென்னாப்பிரிக்கா): பந்து வீச்சாளர்களின் வலுவான செயல்திறன் மற்றும் பேட்ஸ்மேன்களும் ஒரு பயனுள்ள செயல்திறனை வெளிப்படுத்தியதன் மூலம், 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தானை தோற்கடித்து பாகிஸ்தான் சென்றுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் முகமது ஹுரைராவின் 64 ரன்கள் உதவியுடன் ஐ.சி.சி 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையின் காலிறுதி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. இதனையடுத்து அரையிறுதியில் பாகிஸ்தான் பரம எதிரியாக நினைக்கும் இந்தியாவை எதிர்கொள்ள உள்ளது.
நடப்பு சாம்பியனான இந்தியா மற்றும் பாகிஸ்தான் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான போட்டி பிப்ரவரி 4 ஆம் தேதி போட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெறும். இந்தியா செவ்வாய்க்கிழமை (ஜனவரி 28) அன்று ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 49.1 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் 41.1 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பில் இலக்கை அடைந்தது. கேப்டன் ஃபர்ஹான் ஜாகீல் ஆப்கானிஸ்தான் சார்பாக அதிக ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் சார்பாக முகமது அமீர்கான் அதிகமாக மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
வெற்றி இலக்கைத் துரத்தும் போது ஹுரைரா பாகிஸ்தான் சார்பாக 64 ரன்கள் எடுத்தார், இரண்டாம் இடத்தில் இறங்கிய பேட்ஸ்மேன் ஹைதர் அலி 28 ரன்கள் எடுத்தார். காசிம் அக்ரம் (25 நாட் அவுட்), முகமது ஹரிஸ் (ஆட்டமிழக்காமல் 29) ஆகியோர் ஐந்தாவது விக்கெட்டுக்கு இடைவிடாமல் 63 ரன்கள் சேர்த்ததன் மூலம் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
அதேபோல 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பையின் அரையிறுதிக்கு இந்தியா வந்துள்ளது. செவ்வாயன்று, ஆஸ்திரேலியாவை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் நான்கு இடங்களுக்கு முன்னேறியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது. இந்திய அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 233 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதற்கு பதிலளித்த இந்தியா, பந்து வீச்சாளர்களின் அற்புதமான உதவியுடன் கங்காரு அணியை 43.3 ஓவர்களில் 159 ரன்களுக்கு அவுட் செய்தது. இந்தியாவைப் பொறுத்தவரை கார்த்திக் தியாகி நான்கு, ஆகாஷ் சிங் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.