IND vs AUS: விராட் செய்ய காத்திருக்கும் சம்பவங்கள்... மீண்டும் அடி வாங்குமா ஆஸ்திரேலியா!

IND vs AUS, Virat Kohli: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், பல சாதனைகளை எதிர்நோக்கி விராட் கோலி இதில் களம் காண உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 16, 2023, 09:36 PM IST
  • முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.
  • முக்கிய சாதனையை விராட் இதில் படைக்க வாய்ப்புள்ளது.
IND vs AUS: விராட் செய்ய காத்திருக்கும் சம்பவங்கள்... மீண்டும் அடி வாங்குமா ஆஸ்திரேலியா! title=

IND vs AUS, Virat Kohli Upcoming Records: கடந்த மூன்று ஆண்டுகளாக உலகமே கொரோனா தொற்றால் மிகவும் கவலையோடு இருந்தது என்றால், மறுப்புறம் விராட் கோலியின் ரசிகர் கூட்டம் அவர் சதம் அடிக்கவில்லை என கூடுதல் சோகத்தில் இருந்தது எனலாம். ஆனால், அவர்களின் அத்தனை நாள் சோகத்தையும், விராட் கோலி தற்போது போக்கிவிட்டார் என்றே கூறலாம். 

நீண்ட நாள்களாக எதிர்பார்த்து வந்த சதத்தை, கடந்தாண்டு ஆசிய கோப்பையின்போது, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அடித்து முதல் டி20 சதத்தை அவர் பதிவு செய்தார். தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் ஒருநாள் தொடரில், கடைசியாக நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்டிலும் என மூன்று ஃபார்மட்டிலும் சதம் அடித்து, தனது வேலை இன்னும் மிச்சம் இருக்கிறது என்பதை உலகிற்கு விராட் கோலி அறிவித்துவிட்டார்.

விராட்டின் முக்கியத்துவம்

இந்தாண்டு, 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடக்கிறது. அதற்கு முன், இந்தியா பல்வேறு ஒருநாள் தொடர்களில் விளையாட ஆயத்தமாகி உள்ளது. இதற்கிடையில், வரும் ஜூன் 7 - 11ஆம் தேதிகளில், இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் இந்தியா முன்னேறியுள்ளது. இந்த இரண்டிலும் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றுவிட்டால், 2023ஆம் ஆண்டு என்பது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நிலைத்து நின்றுவிடும். இதை நிறைவேற்ற விராட் கோலியின் பங்கும் அவசியமாகும்.

மேலும் படிக்க | IPL 2024 சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ்க்காக விளையாடுவார் தோனி! ரசிகர்களுக்கு குஷி

அந்த வகையில், விராட் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் பெறுகிறது. அவர் மீது தற்போது அழுத்தங்கள் குறைவு. பழைய ஃபார்மில் தன்னை நிறுத்திக்கொண்டாலே போதும் என்ற நிலைமட்டும்தான். இந்நிலையில், நாளை தொடங்க உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரும் விராட் கோலிக்கு முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. 

காத்திருக்கும் மைல்கல்கள்!

இந்த தொடரில் அவர் இன்னும் 191 ரன்களை எடுத்தால், சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில் 13 ஆயிரம் ரன்களை தாண்டும் ஐந்தாவது வீரர் என்ற பெருமையை பெறுவார். இதற்கு முன், சச்சின், சங்கக்காரா, பாண்டிங், ஜெயசூர்யா ஆகியோர் மட்டுமே 13 ஆயிரம் ரன்களை ஒருநாள் போட்டிகளில் கடந்துள்ளனர். இதுமட்டுமின்றி, விராட் கோலி இன்னும் 3 சதங்கள் அடித்தால், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் (49 சதங்கள்) சாதனையை சதம் செய்வார். 

இவையெல்லாம் விட, சொந்த மண்ணில் அதிக ரன்களை அடித்த பேட்டர்கள் பட்டியலில், ரிக்கி பாண்டிங்கை விராட் கோலி மிக மிக நெருங்கிவிட்டார். இத்தொடரில் அதை அவர் எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதிலும், சச்சின் டெண்டுல்கரே முதலிடம் பிடிக்கிறார். 

முதல் ஓடிஐ

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை (மார்ச் 17)  நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | IPL: ஐபிஎல் வரலாற்றின் கருப்பு பக்கங்கள்... கிரிக்கெட் ரசிகர்களை உலுக்கிய முக்கிய சர்ச்சைகள்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News