ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி இல்லை. அவர் சொந்த காரணங்களுக்காக அணியிலிருந்து விலகி இருக்கிறார். இந்நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து பேசியிருக்கும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், விராட் கோலி இருந்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
மைக்கேல் வாகன் பேசும்போது, "இந்தியாவின் தோல்விக்கு விராட் கோலியின் இல்லாதது ஒரு முக்கிய காரணம்" என்று வோன் கூறினார். "விராட் கோலி சிறந்த திட்டமிடுபவர். அவர் போட்டியின் சூழலை நன்கு புரிந்துகொள்கிறார். அவர் எப்போதும் சிறந்த முடிவுகளை எடுக்கிறார். விராட் கோலி இருந்திருந்தால் இந்தியா முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்றிருக்கலாம்" என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் படிக்க | ஆசிட் குடித்த கிரிக்கெட் மயங்க் அகர்வால்! மருத்துவமனையில் அனுமதி! போலீஸ் விசாரணை!
இந்தியாவின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவை மைக்கேல் வாகன் விமர்சித்தார். "ரோஹித் சர்மா ஒரு சிறந்த வீரர். ஆனால் அவரது கேப்டன்சி சராசரியாக உள்ளது" என்று மைக்கேல் வாகன் கூறினார். "விராட் கோலியின் கேப்டன்சியில் இந்தியா அதிக வெற்றிகளைப் பெற்றது. ரோஹித் சர்மாவை விட விராட் கோலி சிறந்த கேப்டன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸின் முடிவில் 190 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதனால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என எல்லோரும் நினைத்திருந்த நேரத்தில் இங்கிலாந்து அணியின் ஒல்லி போப் நங்கூரம் போல் நிலைத்து நின்று விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 230 ரன்கள் முன்னிலை பெற வைத்தார்.
இதனையடுத்து விளையாடிய இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேன்கள் யாரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. அவர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் இந்திய அணி தோல்வியை தழுவ நேரிட்டு, 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றிருக்கிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே இரண்டாவது டெஸ்ட் 2 ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது.
மேலும் படிக்க | குடும்பத்திற்கே நல்ல நேரம்... கிரிக்கெட்டில் கலக்கும் 'கான்' சகோதரர்கள்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ