இந்திய கேப்டன் விராட் கோலி திங்களன்று, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு இளஞ்சிவப்பு பந்து பகல் மற்றும் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட தனது அணி தயாராக இருப்பதாக அறிவித்தார், மேலும் இந்த போட்டியானது பெர்த் அல்லது கபாவில் இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் இரு தரப்பினருக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் தொடக்க விழாவில் பேசிய 31 வயதான அதிரடி நாயகனிடம் இருந்து இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளது.
நவம்பர் 2019-ல், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸில் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இளஞ்சிவப்பு பந்துடன் இந்தியா போராடியபோது, பகல்-இரவு டெஸ்ட் விளையாடிய உலகின் ஒன்பதாவது நாடாக இந்தியா அறியப்பட்டது. அந்த போட்டியில் இந்திய ஒரு இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மோதலுக்கு முன்னர், இந்தியா முன்பு பல முறை பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக கோலி தனது தரப்பில் மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார், உலகில் எவருக்கும் எதிராகவும், விளையாட்டின் எந்த வடிவத்திலும் போட்டியிட இந்தியாவுக்கு திறமை உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்., "நாங்கள் இங்கே பகல்-இரவு டெஸ்டில் விளையாடியுள்ளோம், அது எப்படி சென்றது என்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். இது டெஸ்ட் தொடரின் மிகவும் உற்சாகமான அம்சமாக மாறியுள்ளது, மேலும் பகல்-இரவு டெஸ்ட் விளையாடுவதில் நாங்கள் முற்றிலும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்" என்று கோலி செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், "நாங்கள் நிச்சயமாக பகல்-இரவு டெஸ்ட் விளையாடத் தயாராக இருக்கிறோம், போட்டியின் இடம் கப்பா, பெர்த் என்பது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல. உலகில் எவருக்கும் எதிராகவும், விளையாட்டின் எந்த வடிவத்திலும் போட்டியிடுவதற்கான திறன்கள் இப்போது எங்களிடம் உள்ளன. அது சிவப்பு நிறமாக இருந்தாலும், வெள்ளை நிறம் மற்றும் இளஞ்சிவப்பு நிற பந்து என எதுவாக இருந்தாலும் சரி, எந்தவொரு சவாலுக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், கோலியின் வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய மோதலுக்கு முன்னதாக, அந்த இடத்தில் பனி ஒரு பெரிய காரணியாக இருக்கும் என்று ஒப்புக் கொண்டார், ஆனால் ICC டி20 உலகக் கோப்பை நெருங்கி வருவதால் எந்தவிதமான சவாலுக்கும் தனது தரப்பு தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடருக்கு கவனம் செலுத்தி வருவரு குறிப்பிடத்தக்கது.