இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா (Rohti Sharma)முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி தாக்கூர், சிராஜ், பிரசித் கிருஷ்ணா என மூன்று வேகபந்து வீச்சாளர்கள் மற்றும் வாஷிங்டன் சுந்தர், சஹால் என இரண்டு ஸ்பின்னர்கள் உடன் களமிறங்கியது.
ALSO READ | U-19 WC Final: இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன்
A look at #TeamIndia's Playing XI for the 1st ODI.
Live - https://t.co/NH3En574vl #INDvWI @Paytm pic.twitter.com/SYFrR5LZ5F
— BCCI (@BCCI) February 6, 2022
ஆரம்பம் முதலே சிராஜ் (Siraj) வேகத்தில் மிரட்டினார். மூன்றாவது ஓவரிலேயே விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப்பின் விக்கெட்டை எடுத்தார். 12-வது ஓவரை வீசிய வாஷிங்டன் சுந்தர் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 20வது ஓவரை வீசிய சாஹல் நிக்கலஸ் பூரன் மற்றும் போலார்ட் என இரண்டு பெரிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை அடுத்தடுத்த பந்தில் வீழ்த்தினார். 23வது ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின்பு ஜோடி சேர்ந்த ஜேசன் ஹோல்டர் மற்றும் ஃபேபியன் ஆலன் கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்டது. சிறப்பாக விளையாடிய ஜேசன் ஹோல்டர் அரை சதம் அடித்தார். இறுதியில் 43.5 ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 176 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் சஹால் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Four wickets for @yuzi_chahal as West Indies are bowled out for 176 in 43.5 overs.
Scorecard - https://t.co/VNmt1PeR9o #INDvWI @Paytm pic.twitter.com/gDHCPVOPlQ
— BCCI (@BCCI) February 6, 2022
ALSO READ | கேப்டன் பதவி மேல் பேராசை இல்லாதவர் கோலி : அனுஷ்கா ஷர்மா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR