வெ.இண்டீஸ் ஜாம்பவானைப் பார்த்ததும் தவானின் ரியாக்ஷன் வைரல்

டிரெஸ்ஸிங் ரூமுக்கு வந்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாராவைப் பார்த்ததும் இந்திய அணியின் கேப்டன் தவான் செய்த ரியாக்ஷன் ரசிக்க வைத்துள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 24, 2022, 04:03 PM IST
  • பிரையன் லாராவின் திடீர் விசிட்
  • இந்திய வீரர்களின் ரியாக்ஷன்
  • தவான் செய்த ரியாக்ஷன் வைரல்
வெ.இண்டீஸ் ஜாம்பவானைப் பார்த்ததும் தவானின் ரியாக்ஷன் வைரல் title=

India vs West Indies: ஷிகர் தவான் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்பிறகு இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமிற்கு வந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா, கேப்டன் தவான் உள்ளிட்ட இந்திய வீரர்களை வாழ்த்தினார். 

ராகுல் டிராவிட் ஏற்பாடு

முதல் ஒருநாள் போட்டி முடிந்ததும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கேட்டுக்கொண்டதன் பேரில், இந்திய அணி வீரர்களை சந்திக்க பிரையன் லாரா வந்தார். லாரா தனது பெரும்பாலான நேரத்தை இந்திய கேப்டன் ஷிகர் தவான் மற்றும் யுஸ்வேந்திர சாஹலுடன் செலவிட்டார். இந்த போட்டியில் அரை சதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயருடனும் லாரா சிறிது நேரம் உரையாடினார். 15 நிமிடங்கள் வரை இந்திய வீரர்களுடன் உரையாடிய அவரை, முதன் முதலாக பார்த்தும் கேப்டன் ஷிகர் தவான் கட்டியணைத்து வரவேற்றார். 

மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா விரைவில் ஓய்வு - ரவிசாஸ்திரி அதிர்ச்சி தகவல்

யுஸ்வேந்திர சாஹல், லாராவைப் பார்த்ததும் முற்றிலும் வாயடைத்துப் போனார். பின்னர், லாராவுடன் கைக்குலுக்கிய சாஹல், வழக்கம்போல் ஜாலியாக பேசினார். வீரர்களுடனான உரையாடலுக்குப் பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ராகுல் டிராவிட்டை சந்தித்தார் லாரா. 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தொடர்

இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (இன்று) எதிர்கொள்கிறது. இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரைக் கைப்பற்றிவிடும். கடந்த 16 ஆண்டுகளாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் தொடரை இழந்ததில்லை.

மேலும் படிக்க | இதை செய்தால் ரிஷப் பன்டுக்கு கோடிகள் கொட்டும்! ஆருடம் கூறும் வேகப்புயல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News