நெட் ரன்ரேட் என்றால் என்ன? எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

நெட் ரன் ரேட் என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்திருக்கும்.   பொதுவாக பாயிண்ட்ஸ் டேபிள் மையமாக வைத்து ஒரு அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.  இரண்டு அணிகளும் ஒரே புள்ளிகளை பெற்று இருந்தால் அந்த சமயத்தில் நெட் ரன் ரேட் கணக்கிடப்படும்.  

Written by - RK Spark | Last Updated : Nov 8, 2021, 02:38 PM IST
நெட் ரன்ரேட் என்றால் என்ன? எவ்வாறு கணக்கிடப்படுகிறது?  title=

உலக கோப்பை டி20 போட்டியில் சவுத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மூன்று அணிகளும் தலா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.  மற்ற இரண்டு அணிகளை போலவே 8 புள்ளிகளைப் பெற்று இருந்தும் தென்ஆப்பிரிக்கா அணி வெளியேறியது.  கிரிக்கெட்டில் குறிப்பாக டி20 போட்டிகளில் நெட் ரன் ரேட் என்பது ஒரு அணிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.   இந்திய அணியும் தற்போது அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.  ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு எதிராக நல்ல ரன் ரேட் பெரும் முயற்சியில் குறிப்பிட்ட ஓவருக்குள் போட்டியை வென்று நல்ல ரன் ரேட்டை பெற்றது.  

ALSO READ இந்திய அணியின் தோல்விக்கான 4 முக்கிய காரணங்கள்!

நெட் ரன் ரேட் என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்திருக்கும்.   பொதுவாக பாயிண்ட்ஸ் டேபிள் மையமாக வைத்து ஒரு அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.  இரண்டு அணிகளும் ஒரே புள்ளிகளை பெற்று இருந்தால் அந்த சமயத்தில் நெட் ரன் ரேட் கணக்கிடப்படும்.  

runrate

உதாரணத்திற்கு டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங்கை எடுத்துக் கொள்வோம்.  

இந்தியா தனது முதல் நான்கு போட்டிகளில் அடித்த ரன்கள்: 

பாகிஸ்தான் எதிராக - 20 ஓவர்களில் 151/7
நியூசிலாந்துக்கு எதிராக - 20 ஓவர்களில் 110/7
ஆப்கானிஸ்தான் எதிராக - 20 ஓவர்களில் 210/2
ஸ்காட்லாந்து எதிராக - 6.3 ஓவர்களில் 89/2 

மொத்தமாக 560 ரன்கள், 66 ஓவர் 3 பந்துகளில் (கணக்கீடுகளுக்காக 66.5 ஓவர்கள் என எடுத்துக்கொள்வோம்) 

ரன்கள் விகித கணக்கீடு - 560/66.5 = 8.421 

குறிப்பு:
* நெட் ரன் ரேட் கணக்கிடும் போது விக்கெட்டுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை
* ஒரு அணியானது 20 ஓவர்களுக்கு முன்னதாகவே அவுட்டாக்கப்பட்டால், 20 ஓவர்கள் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும், இல்லையெனில் விளையாடிய ஓவர்களின் எண்ணிக்கை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 

நடந்துகொண்டிருக்கும் T20 WCல்  முதல் நான்கு ஆட்டங்களில் இந்திய அணி விட்டுக்கொடுத்த ரன்கள். 

பாகிஸ்தான் - 17.5 ஓவர்களில் 152/0
நியூசிலாந்து - 14.3 ஓவர்களில் 111/2
ஆப்கானிஸ்தான் - 20 ஓவர்களில் 144/7
ஸ்காட்லாந்து - 17.4 ஓவரில் 85 ரன்களுக்கு ஆல் அவுட்

72.2 ஓவர்களில் மொத்தம் 492 ரன்கள் (கணக்கீடுகளுக்காக 72.33 ஓவர்கள் என எடுத்துக்கொள்வோம்)
ரன் ஒப்பு விகித கணக்கீடு - 492/72.33 = 6.802

runrate

இவ்வாறு நெட் ரன் ரேட் ஒவ்வொரு அணிக்கும் கணக்கிடப்படுகிறது.  இதன் காரணமாகவே ஒவ்வொரு போட்டியின் ரன்களும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

ALSO READ அரையிறுதியில் களமிறங்கும் 4 அணிகள்! வெற்றி வாய்ப்பு யாருக்கு?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News