முரளி விஜய் டி.என்.பி.எல் சீசன் -5-ல் இருந்து விலகினார்: இந்திய கிரிக்கெட் அணி தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் தமிழ்நாடு பிரீமியர் லீக் 5வது சீசனில் இருந்து விலகி உள்ளார். அவர் இந்த ஆண்டு டிஎன்பிஎல் தொடரில் விளையாடுவதை ரசிகர்கள் காண முடியாது. தனிப்பட்ட காரணங்களால் டி.என்.பி.எல் ஐந்தாவது சீசனில் முரளி விஜய் விளையாடவில்லை எனக் கூறப்படுகிறது.
டி.என்.பி.எல் ஐந்தாவது சீசன் ஜூலை 19 முதல் தொடங்குகிறது. திருச்சி வாரியர்ஸ் அணிக்காக முரளி விளையாடி வந்தார். முரளி விஜய் நீண்ட காலமாக கிரிக்கெட் போட்டிலிருந்து விலகி இருக்கிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 முதல் அவர் களத்தில் கிரிக்கெட் விளையாடுவதைக் காண முடியவில்லை.
கடந்த ஆண்டு சையத் முஷ்டாக் அலி டிராபி மற்றும் விஜய் ஹசாரே டிராபியில் தமிழ்நாட்டிற்காக முறை விஜய் விளையாடவில்லை. ஐபிஎல் 2021 தொடரிலும் அவர் மைதானத்தில் இறங்கவில்லை.
முரளி விஜயியின் நெருங்கிய ஒருவரின் தகவல்படி, கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தற்போது கிரிக்கெட் போட்டியில் இருந்து சற்று விலகி இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.
ALSO READ | TNPL 2021: போட்டி அட்டவணை, பங்கேற்கும் அணிகள், நேரம், நேரடி ஒளிபரப்பு -விவரங்கள்
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் விளையாடவில்லை என்றாலும், அவர் விரைவில் கிரிக்கெட்டுக்கு திரும்புவார் என்று மாநில கிரிக்கெட் சங்கம் (Tamil Nadu Cricket Association) நம்பிக்கை தெரிவித்துள்ளது. அவர் மாநில அணியின் முக்கியமான உறுப்பினர். இந்த ஆண்டு அவர் நிச்சயமாக உள்நாட்டு போட்டியில் மீண்டும் பங்கேற்பார் என்று நாங்கள் நம்புகிறோம்" எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு TNPL தொடர் நடத்தப்படவில்லை. இந்த வருடம் ஜூன் மாதம் டிஎன்பிஎல் தொடர் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில் டிஎன்பிஎல் தொடர் வரும் 19 ஆம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளது. டிஎன்பிஎல் 5-வது சீசனில் 28 லீக் போட்டிகள், 4 பிளே-ஆப்கள், 1 பைனல் நடைபெற உள்ளன.
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கிறது.
சேலம் ஸ்பார்டன்ஸ் (Salem Spartans),
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் (Chepauk Super Gillies),
லைக்கா கோவை கிங்ஸ் (Lyca Kovai Kings),
திண்டுக்கல் டிராகன்ஸ் (Dindigul Dragons),
திருச்சி வாரியர்ஸ் (Ruby Trichy Warriors),
திருப்பூர் தமிழன்ஸ் (Tiruppur Tamizhans),
மதுரை பாந்தர்ஸ் (Madurai Panthers),
நெல்லை ராயல் கிங்ஸ் (Nellai Royal Kings)
ALSO READ | Friendship: தோல்வியில் துவளும் நெய்மரை கட்டியணைத்து ஆறுதல் கூறும் மெஸ்ஸி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR